பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/45 சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன். சட்டென்று முடித் துக்கொண்டது எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. அவரது திருமணச் செய்திகளை மேலும் நுணுகிக் கேட்க எனக்குக் கூச்சமாகவும், ஓரளவு அச்சமாகவும் கூட இருந்தது. எனவே பேசாமல் விட்டுவிட்டேன். [...] 8—2–62 வியாழன் D 'புதுச்சேரியில் பிரெஞ்சு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் களுக்கும் தமிழ் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் எப்போதும் போட்டியாகத்தான் இருக்கும். பிரெஞ்சு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அதிகச் சம்பள மும் தமிழ் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்குக் குறைந்த சம்பளமும் புதுச்சேரி அரசாங்கம் கொடுத்து வந்தது. எனவே இரண்டு கூட்டத்திற்கும் இடையே காழ்ப்புணர்ச்சி எப்போதும் இருந்துகொண்டிருந்தது. பதிப் பிள்ளையும் போட்டியிட்ட திருபுவனத் தேர்தல் கடைபெற்றது. இத் தேர்தல் முடிந்தவுடன் கவிஞர் மீது பொய் வழக்குப் போடப்ப்ட் டது. திங்கள் 3 நாள் காவலில் வைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளிவந்து இரண்டு திங்கள்கள் கழித்துத் திருமணம் நடைபெற்றது. சிறைக்குச் செல்வதற்கு முன்பே திருமன்ம் கிச்சயிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத் தக்கது. - பூம்புகார் பிரசுரம் வெளியிட்டுள்ள (குயில் பாடல்கள்-பாவேந்தர் ஆாழ்க்கைக் குறிப்புகள் பக்கம்-10) நூலில் பாவேந்தர் 14ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கன்க்குப்படி பார்த்தால் பாவேந்தருக்குத் மணம் 30 ஆம் வயதில் தான் டக் திருக்கும் என்று ஆகிறது.என்வே இச்செய்தி சரியானதாகப்படவில்லை. இச் செய்தியைப் பற்றிய_உண்மையான விளக்கத்தை அறியப் புதுவை அரசாங்கக் குறிப்பேடுகளை ஆய்ந்து திருபுவனத் தேர்தல் காளையும். பாவேந்தருக்குச் சிறைத்தண்ட்னை வழங்கிய வழ்க்கு மன்றி ஆணையையும் கண்டறிய வேண்டும். - - -