பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுக்தரம்133 D 4–3–62 ஞாயிறு 口 இன்று விடுமுறையாகையால் காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு நேராகப் பாவேந்தர் இல்லம் வந் தேன். என்னைக் கண்டதும் 'என்ன வெளியில் போக லாமா? கொஞ்சம் வேலையிருக்கிறது' என்று சொன்னர். பொன்னடி சகானிஸ் அருகில் சென்று டாக்சி கூட்டி வந் தார். குயில் பத்திரிகைக் காகிதக் கோட்டா அப்போது வந் திருந்தது. அது மூன்று திங்களுக்கு ஒரு முறை வந்து கொண்டிருந்தது, என்று எண்ணுகிறேன். அதை எடுக்க ரூ. 5000 வேண்டும். பாவேந்தர் கையில் பணமில்லை. அது சம்பந்தமாக இரண்டு மூன்று பேரைப் பார்த்தோம். ஒவ்வொருவரும் பாவேந்தரைப் பார்த்தவுடன் எழுந்து நின்று கைகூப்பிவணங்குவர்; அடக்கமாக எதிரில் நின்று சிற்றுண்டியும் சுவைநீரும் வழங்குவர்; பணப்பேச்சை எடுத்தால் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி மெதுவா கக் கழன்று கொள்ளுவர். பணத்துக்காக ஒரு பெருங் கவி ஞன் இவ்வாறு அவமானப் பட்டதை என்னல் தாங்கிக் கொள்ள முடியவில்லை; மிகவும் வேதனையாக இருந்தது. இந்தச் சமயத்தில் செக்நாட்டுத் தமிழ் அறிஞரான பண்டாரகர் காமில் ஸ்வலபில் அவர்கள் தம் நாட்டுப் பிர பலப் பத்திரிகையான 'நோவி ஓரியண்டில் பாவேந்தர் பாடல்கள் சிலவற்றை மொழி பெயர்த்து வெளியிட்டிருந் தார். அதில் பாவேந்தர் படமும், வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளும் கூட வெளியிடப்பட்டிருந்தன. அந்த இத ழின் படி ஒன்றைப் பாவேந்தருக்கு அவர் அனுப்பிவைத்த தோடு, ஒரு கடிதமும் எழுதியிருந்தார். அதில் பாவேந்தர்