பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினேவுகள்/58 எழுதிய நூல்கள் அனைத்திலும் ஒவ்வொரு படி திரட்டி அனுப்பும்படி கேட்டிருந்தார். அவருக்கு அனுப்புவதற் குச் சில நூல்களின் படிகள் கிடைக்காமல் இருந்த கார ணத்தால் நானும் பாவேந்தரும் பாரிநிலையம் சென்ருேம். அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் கணக்கெடுப் புக்காகப் பாரி நிலையம் உள்ளே திறந்து வைக்கப்பட்டிருந் தது. பாரிநிலையம் மாடியின் மேல் உள்ளது. அதன் மாடிப் படி செங்குத்தானது. அதன்மேல் பாவேந்தரால் ஏற முடி யவில்லை; மூச்சு வாங்கியது. எனவே நான் மட்டும் மேலே சென்று அதன் உரிமையாளரான திரு செல்லப்பன் அவச் களிடம் பாவேந்தர் வந்திருப்பதாகச் சொன்னேன். அவர் கீழே இறங்கி வந்தார்; தேவையான நூல்களைக் கட்டா கக் கட்டிக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டு பாவேந்தரும் நானும் இல்லம் திரும்பினுேம். பாவேந்தர் இல்லத்தில் இடைவேளை உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொண்டேன். மாலையில் அவர் அறைக்குள் நுழைந்தபோது, அவருடைய மீசையைப் பற்றி முதலில் நான் எழுதிக்கொடுத்திருந்த பாடலைத் திருத்திக் கொண்டிகுந்தனர். நான் அப்போது கவிதைத் துறையில் கற்றுக் குட்டி. என் பாட்டில் பல பிழைகள் இருந்தன. அப்பிழைகளையெல் லாம் திருத்தி முடித்தபின், தாம் திருத்தியதற்குச் சான்ருக மூன்று இடத்தில் கையெழுத்திட்டுத் தேதியும் குறிப்பிட் டார். அச்சுவடியை இன்றும் பொன்னே போல்போற்றிப் பாதுகாத்து வருகிறேன். பொதுவாக மரபுக் கவிதை எழுதுபவர்களிடம் காணப் படும் பிழைகள் இரண்டு. ஒன்று குற்றியலுகரப் பிழை: மற்ருென்று எந்தன் உந்தன் பிழை. இன்று மிக்க விளம் பரம் பெற்றிருக்கும் பெருங்கவிஞர்களின் நூல்களைப் புரட் டினுலும் இப்பிழைகள் மலிந்திருக்கக் காணலாம். ஒரு பெருங்கவிஞரிடம் இதைப்பற்றிக் குறிப்பிட்டுக் கேட்ட