பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்159 சிறப்பாகப் பேசினர். 'உங்களுக்கெல்லாம் தமிழை நான் வாரிக் கொடுக்கிறேன்; எனக்கெல்லாம் தமிழை வாரிக் கொடுப்பவர் பாரதிதாசனர்”. என்று என்னைப் பாராட்டிப் பேசினர். பின்னர் கனியிடை ஏறிய சுளையும் என்ற பாடலை இசையோடு பாடி அதிலுள்ள பல நயங்களைச் சுவைக்கச் சுவைக்க எடுத்துரைத்தார். இதில் ஒரு சிறப்பு என்னவென்ருல் கிருபானந்தவாரியாரே விரும்பிக் கேட்டு என் தலைமையில் வந்து பேசினர். தமிழ் அவருடைய வாயில் கொஞ்சி விளையாடியது. முடிவுரையில் அவ ருடைய தமிழ்ப் புலமையையும், பேச்சாற்றலையும் நன்கு பாராட்டிப் பேசினேன்' என்று பாவேதிதர் கூறிஞர். இந்த வேலூர் கூட்ட நிகழ்ச்சியைப் பற்றி வேருெரு கூட் டத்தில் கவிஞரிடம், "என்ன வாரியார் எப்போதும் முருகனைப் பற்றியே பேசி ஆத்திகப் பிரசாரம் செய்கிருர், நம்மையெல்லாம் (சுயமரியாதைக்காரரை) மே ைட தோறும் திட்டுகிருச். நீங்கள் எப்படி அவரைப் பாராட்டிப் பேசலாம்?' என்று யாரோ எழுந்து கேள்விகேட்டார்கள். இதைப்பற்றியும் பாவேந்தரிடம் கேட்டேன். "ஆமாம் கேட்டார்கள், நம்ம கட்சியிலே பேசினு நீங்க பனமா கொடுக்கறிங்க?அதனுல பணம் கொடுக்கிறவர்கள் கூட்டத்திலே ஆதரிச்சுப் பேசுகிருர். அது அவர் பிழைப்பு என்று பதில் சொன்னேன்' என்று குறிப்பிட்டார். [T] 20–3–62 செவ்வாய் [T] இன்று மாலை பாவேந்தர் கலகலப்பாக இல்லை. தாம் எழுதிய ஓர் வண்ணப்பாடலைப் பார்த்துத் திருத்திக்