பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/60 கொண்டிருந்தார். இன்று எங்கள் பேச்சும் சுறுசுறுப்பாக இல்லை. பாவேந்தர் மகிழ்ச்சிய்ாக இருக்கும்போது அவரே ஆர்வத்துடன் பல செய்திகளைச் சொல்வார். மற்ற நேரங்களில் நாம் க்ேட்டாலும் ஏதோ பதிலுக்குச் சில சொற்கள் சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்து விடுவார். அப்போது அவர் மனநிலை சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டு நான் எழுந்து வந்து விடுவேன். இன்று அவ ருடைய உள்ள நிலை மூட்டம் போட்டதுபோல் தெளி வில்லாமல் இருந்தது. எனவே, அவர் இன்று கூறிய கருத்துக்களும் ஒன்றுக்கொன்று த்ொடர்பின்றி இருந் தன. இன்று அவர் கூறியவற்றுள் இரண்டு செய்திகள் குறிப்பிடத்தக்கன. ஒன்று வண்ணப்பாவைப் பற்றியது. பாவேந்தர் கி.பி.1919 இல் திரிபுவனேயில் ஆசிரியர் பணி செய்து கொண்டிருந்தார். மாணிக்க வாத்தியார் என் பவர் இவருக்கு மிகவும் வேண்டிய நண்பர். மாணிக்க வாத்தியாரின் உறவினர் ஒருவர் பத்து வண்ணங்கள் எழுதிப் பாவேந்தர் பார்வைக்கு அனுப்பி வைத்திருந் தார். நிறையப் பிழைகள். வண்ணப்பா அசை எண்ணி எழுதவேண்டும்.ஓரிடத்தில் பிழையென்ருல் எல்லாவிடத் தும் உதைக்கும். எனவே அப்பாடல்களைப் பல நாள் வைத்திருந்து, பல முறை படித்துப் பொறுமையோடு திருத்தி அனுப்பினராம். அப்போதிருந்து வண்ணப் பாவைப் பற்றி நன்கு ஆய்ந்து அதில் தாம் பயிற்சியும், புலமையும் பெற்றதாகப் பாவேந்தர் குறிப்பிட்டார். மற்ருெரு செய்தி பாவேந்தரின் உடல்நலக் குறைவு பற் றியது. கி. பி. 1958-59 ஆம் ஆண்டுகளில் பாவேந்தர் என்புருக்கி நோயில்ை தாக்கப்பட்டார். சில ந்ோய்கள் சில வயதில் வரும்போது தொல்லை கொடுப்பதில்லை. என் *பாவேந்தர் என்னிடம் கூறும்போது தாம் என்புருக்கி கோயில் தாக்கப் பட்டது 1958-59 ஆம் ஆண்டுகளில் என்று குறிப்பிட்டார். அவர் புதுவையிலிருந்து கடத்திய குயில் ஏட்டில் 1910-59 இல் மார்புச் சளியின் காரணமாகப் 蠶 தலைமை மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதாகச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.