பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/65 டேன்' என்று கூறி என்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண் டார்,” என்று இந்நிகழ்ச்சியை முடித்தார் பாவேந்தர். 'சமண ராமாயணம் என்று தமிழில் ஒரு நூல் இருக்கி றதா?' என்று பாவேந்தரை நான் கேட்டேன். "மைசூர்க் கோலாரில் ஒரு பெளத்தர் இருக்கிருர். அவர் சுயமரியாதைக்காரர்; பெரியாரின் நண்பர். அவரிடம் இந்தச் சமண ராமாயணத்தைப் பார்த்தேன். அந் நூலுக் குத் "தசரத காவியம்’ என்பது பெயர். பல நிகழ்ச்சிகள் மூலக்கதையினின்றும் வேறுபடுகின்றன. இதில் இராம னுக்குப் பத்தாயிரம் மனைவியரும், அனுமனுக்கு ஆயிரம் மனைவியரும் உண்டு. துளசி ராமாயணக் கதை உனக்குத் தெரியுமா? துளசி ராமாயணத்தில் இராமன் காட்டுக்குச் செல்லும்போது பூமிதேவி சீதையைத் தன்னிடத்தில் மறைத்துக் கொண்டு "டியூப்லிகேட் சீதை' யைக் கொடுத் தாள்' என்று கூறினர். இன்று பாவேந்தர் 1957 இல் பெங்களூரில் நடைபெற்ற குறள் மாநாட்டு நிகழ்ச்சி பற்றிக் கூறினர். அவர் கூறிய செய்தியைக் கீழே கொடுத்திருக்கிறேன்: tஅந்தக் கோலார் நண்பர் திரு. அப்பாத்துரை என்று பின்னல் விசா ரித்து அறிந்தேன், அவர் புத்த சமயத்தைச் சார்ந்தவர்; தமிழின் என்ற பத்திரிகை நடத்தியவர்.