பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/69 'டேய்!” என்று அவர் குரல் கொடுத்தால் மரம் செடிகள் கூட நடுங்கும். அவர் சேர்வராயன் மலைக் காட்டுராஜா. அவரைப் போல் நிர்வாகத் திறமை மிக்க ஒருவரை நான் பார்த்ததில்லை. சுறுசுறுப்பு ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகிய வற்றின் மொத்த உருவமவர். எவரையும் மதித்துப் பேச மாட்டார். எவரையும், எப்போதும் எதிர்பார்த்து வாழாத வாழ்க்கை அவர் வாழ்க்கை. ஆங்கிலேயனைப் போல் திட்டமிட்டுச் செயலாற்றிய அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இத்தகைய ஆற்றலும் செல்வாக்கும் மிக்க டி.ஆர். சுந்தரத் தின் எதிரில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு, விரலிடுக்கில் சிகரெட் புகைந்து கொண்டிருக் கும் கையை நீட்டி என்ன சுந்தரம்?’ என்று ஒருமையில் பேசும் துணிச்சல் என்னைத் தவிர வேறு எவனுக்கும் இருந்ததில்லை. நான் படத்துக்கு எழுதிக் கொண்டிருந்த போது, சேலம் சீரங்கபாளையத்தில் இருக்கும் மாடர்ன் தியேட்டர்ஸ் ஒத்திகைக் கூடத்தின் (Rehearsal Hall) மேல் மாடியில் தங்க ஓர் அறையும், என் உணவு மற்றத் தேவைகளைக் கவனித்துக் கொள்ள ஓர் ஆளும் கொடுத்தி ருந்தார். நான் உண்ணும் உணவு முறைகளை அறிந்து, எனக்கு விருப்பமான மீனும், புலால் உணவும் நாள்தோறும் அனுப்பி வைப்பார். என்னுடைய 'எதிர்பாராத முத்தம்' காப்பியத்தைப் படமாக எடுப்பதற்கு வேண்டிய பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. எதிர்பாராத முத்தம் கதைக்கும், அதற்கு வசனம் எழுதுவதற்கும் ஆக ரூ 10, 001/- என்று நானும் சுந்தரமும் நேரில் பேசி முடித்துக் கொண்டோம். இன்னும் எழுத்து வடி வில் ஒப்பந்தம் எதுவும் ஆகவில்லை. பொதுவாகப் படங்களுக்கு நடிகர்களையும் எழுத்தாளர்களையும் டி.ஆர். எஸ். தம்மிடமிருந்த ஒரு மேலாளர் (Manager) மூலமா கவே ஒப்பந்தம் செய்வது வழக்கம். அவ்வாறு ஒப்பந்தம்