பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/72 களின் கையெழுத்துப்படியை வாங்கி வரும்படி சொல்லி ஓர் ஆளை டி.ஆர்.எஸ். அனுப்பியிருந்தார். அத்தக் காட்சி களை எழுதியதற்காக ரூ. 3000/- வாங்கி வரும்படி அந்த ஆளிடம் சொல்லி அனுப்பினேன். அவனும் சென்று ரூ 3000/- க்கு ஒரு காசோலை வாங்கிக் கொண்டு வந் தான். அதற்குள் புதுவை செல்லப் பெட்டி படுக்கைகளைக் கட்டி வைத்துவிட்டேன். பின்னர் ஒரு குதிரை வண்டியில் பெட்டி படுக்கையை ஏற் றினேன். வந்த ஆளோடு நானும் ஏறி, வண்டிக்காரனே சேலம் ஸ்டேட் பேங்கிற்கு ஒட்டச் சொன்னேன். பேங்கில் காசோலையை கொடுத்துப் பணமாக்கிக் கொண்டேன். திரைக்கதை வசனம் எழுதியிருந்த கையெழுத்துப்படிகளை அந்த பேங்கின் கூடத்தில் வீசியெறிந்தேன். அவன் ஒவ் வொரு தாளாகப் பொறுக்கி எடுத்துக் கொண்டு சென் ருன். அதன்பிறகு நான் மாடர்ன் தியேட்டர்ஸ் வாயிற் படிகளை மிதிக்கவில்லை." இந்த நிகழ்ச்சியைப் பாவேந்தர் சொல்லி முடித்தபோது என் உள்ளம் மிகவும் சங்கடப்பட்டது. அந்தக் காலத்தில் ரூ. 40, 000/- சாதாரணத் தொகையா? இவ்வளவு பெருந் தொகையை உணர்ச்சி வசப்பட்டு அணுவசியமாக உதறி யெறிந்து விட்டு வந்த பாவேந்தர் செயலை மான வீரம் என்று சொல்வதா? அல்லது பயித்தியக்காரத்தனம் என்று சொல்வதா? என்று என்னல் முடிவு கட்ட முடியவில்லை. இன்றையத் திரைப்பட எழுத்தாளர்கள் இயக்குநர்களின் விருப்பப்படி எதை வேண்டுமானலும் எப்படி வேண்டு மாலுைம் கேட்காமலே மாற்றிக் கொள்ள இசைவளிக் கிருர்கள். இவர்களெங்கே? பாவேந்தர் எங்கே?