பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/73 13–4–62 செவ்வாய் 口 இன்று பாவேந்தர் கூறிய செய்தி எனக்குச் சற்று வியப் பிற்குரியதாக இருந்தது. ஏனென்று சொன்னுல் இன்று கூறப்படும் நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டுள்ள கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்கள் நாடறிந்த பெருங் கவி ஞர்; குழந்தையுள்ளம் படைத்தவர். இந்த நூற்ருண்டில் வாழ்ந்த சமகாலப் பெருங் கவிஞர் இருவரின் சந்திப்பு இப்படி முடிந்து விட்டதே என்று படிப்போர்க்கு வருத்தம் எழாமல் இருக்க முடியாது. அந் நிகழ்ச்சி பற்றிப் பாவேந் தரே கூறுகிருர், கேளுங்கள்: 'பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. நாகர்கோயிலில் ஒரு மாநாடு நடைபெற்றது. தமிழ் எழுத் தாளர் மாநாடோ... இலக்கிய மாநாடோ... எனக்குச் சரி யாக நினைவில்லை. அம்மாநாட்டுத் தலைவர் டி. கே. சி. அதில் சீனிவாசராகவன் கலையைப் பற்றிப் பேசினர். மாநாடு கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுடைய திரைப் படக் கொட்டகையில் நடைபெற்றது.நான் என்.எஸ்.கே. வீட்டில் தங்கியிருந்தேன். அம் மாநாட்டில் காலை நிகழ்ச்சி யாக எனது பேச்சு இருந்தது. தேசிக விநாயகம்பிள்ளை வரவேற்புரை நிகழ்த்தினர். மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த இலக்கிய அறிஞர்களை வரவேற்றுப் பேசிய அவர் என்னைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'புதுவைக் குயில் வந்திருக்கிறது. அது இங்கு அளவோடு கூவ வேண்டும். அதிகமாகக் கூவினல் கூண்டில் பிடித்து அடைத்து விடுவார்கள்’ என்று கூறினர். நான் பொறுமை யோடு கேட்டுக் கொண்டிருந்தேன்.