பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம் 75 [] 23–4—62 வியாழன் [T] பாவேந்தர் எப்போதும் உணர்ச்சிவயப்படக் கூடியவர். உணர்ச்சி வயப்படாதவன் கவிஞனுக இருக்க முடியாதே! இதல்ை பாவேந்தரோடு பழகுபவர்கள் மிகவும் எச்சரிக் கையோடு அவரிடம் பழக வேண்டியிருந்தது. நன்ருகப் பழகிக் கொண்டிருப்பார். யாராவது நம்மைப் பற்றித் தவருண முறையில் கோள் சொன்னுல் ஆராயாமல் அப் படியே நம்பி விடுவார். அடுத்தமுறை அவரைப் பார்க்கச் சென்ருல் 'போ வெளியே! பல்லை உடைச்சிடுவேன்" என்று கூச்சலிடுவார். இது அவர் இயல்பு. எளிதில் யாரையும் நம்பும் அவர் யார் என்ன சொன்ன லும் செலவைப் பற்றிப் பொருட்படுத்தாமல் உடனே கையிலிருக்கும் காசைச் செலவு செய்யத் தொடங்கி விடு வார். யார் தடுத்தாலும் கேட்கமாட்டார். இது நமக்குத் தேவையா? தேவையில்லையா? என்பதைப் பற்றிச் சிந் திக்க மாட்டார். பாவேந்தர் தம்முடைய வீட்டில் எப்போதும் நல்ல இனத் தைச் சேர்ந்த கோழிகள், புருக்கள் வளர்ப்பது வழக்கம். 'வீடு என்று இருந்தால் ஒரு பசுமாடு, கோழிகள், புருக் கள் எல்லாம் இருக்கவேண்டும்' என்று கூறுவார். புதுச் சேரி வீட்டில் கூட 'காமலாபுரம் குட்டைப்பசு ஒன்று எப்போதும் இருக்கும்; புருக்கள் இருக்கும். சென்னை இராமன் தெரு வீட்டிலும் பாவேந்தர் கோழிகள் வளர்த்து வந்தார்.