பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/77. புதுவை பா.முத்து, அறிவழகன் ஆகியோர், பாவேந் தரின் புதுவை மாணவர்களுள் கவிஞர்கள் வாணிதாசன், சிவப்பிரகாசம் எம்.பி., பா. முத்து ஆகிய மூவரும் முக்கிய மாணவர்கள். இந்தப் பா.முத்து. புதுவைத் துறைமுகத்தில் ஏதோ ஒர் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந் தார். அவர் அடிக்கடி சென்னை வந்து பாவேந்தரைப் பார்த்துச் செல்வது வழக்கம். வரும் போதெல்லாம் வெளி நாட்டில் இருந்து இறக்குமதியாகும் ஹார்லிக்ஸ், ஓவல், சிகரெட் ஆகியவற்றைக் கொண்டு வந்து கொடுப்பார். இன்றும் கொண்டு வந்திருந்தார். பாவேந்தர் இவரிடத் தில் மிகுந்த அன்போடு பழகுவார். பாவேந்தரின் அழ கின் சிரிப்பைப் பின்பற்றி இயற்கை இன்பம்' என்ற பெயரில்இவர் ஒரு நூல் எழுதியிருக்கிருர், பாவேந்தரைப் பார்க்க வந்திருந்தபோது இவருக்கு வயது நாற்பது இருக்கும். இப்போது இவர் உயிருடன் இல்லை. சுயமரியாதை இயக்கத்தில் பொன்னம்பலளுர் இருவர். ஒருவர் பூவாளுர் அ. பொன்னம்பலஞர்; மற்ருெருவர் தமிழ்மறவர் பொன்னம்பலஞர். இன்று பாவேந்தரைப் பார்க்க வந்திருந்தவர் தமிழ்மறவர் பொன்னம்பலஞர். வேலூர் கண்டர் உயர்நிலைப் பள்ளியிலும். சேலம் நகர வைப் பள்ளியிலும் நீண்டநாள் தமிழாசிரியராகப் பணி யாற்றியவர். இறுதி நாட்களில் திருச்சி மாவட்டத்தில் முசிரி, பொன்பரப்பி ஆகிய ஊர்களில் பணியாற்றினர். இவர் நூற்றுக்கு நூறு பெரியாரின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர். இவர் எந்தக் காரணத்துக்காகவும், எவருக்காகவும் - ஏன், அரசாங்கத்துக்குக் கூட - தம் கொள்கைகளை விட்டுக்கொடுக்காதவர். இதனுல் வாழ்க் கையில் இவருக்கு எதிர்ப்புகளும் தொல்லைகளும் அதிகம். ஆளுல் இவர் எந்த எதிர்ப்பையும் சமாளித்து, வெற்றியே கண்டவர். யாரும் எளிதில் உடைக்க முடியாத நெற்றுக்