பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் னேவுகள்/t8 கொட்டை. கவிஞர் பொன்னடியான்* தமிழ்மறவர் பொன் னம்பலஞரின் தயாரிப்பு. முசிரியில் நடந்த மாணவர் கிளர்ச்சியில் பொன்னம்பலஞ்ருக்கு ஆதரவாக இருந்து, கிளர்ச்சியை முன்னிருந்து தடத்தியவர் பொன்னடியான். இதனுல் பள்ளிப்படிப்புப் பாதிக்கப்பட்டு இருந்தபோது, பொன்னடியானைப் பாவேந்தரிடத்தில் கொண்டு வந்து ஒப்படைத்தவர் பொன்னம்பலஞரே. பொன்னம்பலஞர் தம் அடைமொழிக்கேற்பத் தோற்றத் தில் தமிழ் மறவராகவே காட்சியளிப்பார். எப்போதும் கருப்புச் சட்டைதான் போடுவார்; பள்ளிக்கும் கருப்புச் சட்டையோடு தான் வருவார். பெரியார் ‘எப்போதும் க்த்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிக்கை விட்ட பிறகு, எப்போதும் தமது கருப்புக் கோட்டுப் பையில் பிச்சுவா ஒன்றை வைத்துக் கொண்டிருப்பார். அளவு கடந்த தனித் தமிழ்ப்பற்று உடையவர். மறந்தும் பிற மொழிச் சொற்களைத் தம்பேச்சில் கலக்க மாட்டார். தனித் தமிழிலேயே பேச வேண்டும் என்பதில் பாவாணரைப் போல் இவரும் கண்டிப்பானவர். சேலத்தில் இருந்த போது உண்வு விடுதிகளுக்குச் சென்ருல் சுவைமுறுக்கு சுவைக்கட்டி (மைசூர்ப்பாகு), சுவைக்களி , (قانهق يع) (அல்வா) கார்க்க்லவை (மிக்சர்) என்று தான் கேட்பார். "ஒ என் சகோதரரே என்று தொடங்கும் பாவேந்தரின் "சஞ்சீவிபர்வதத்தின் சாரல் வரிகளைத் தேர்வுத்தாளில் கொடுத்துக் கேள்வி கேட்டதற்காக அரசாங்கம் இவர் மீது நடவடிக்கை எடுத்தது. சேலம் நகராட்சிப் பள்ளியில் இவர் பணியாற்றிய் போது இந்நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்மறவர் பொன்னம்பல்ஞரின் தொடர்பு பாவேந்தரின் இலக்கியப் போக்கில் பெரிய பாதிப்பை உண்டாக்கி, அவ *பொன்னடியான் என்ற பெயர் பொன்னம்பலஞருக்கு அடியவன் என்பதைக் குறிப்பிட வைத்துக் கொண்டதாகும். பொன்னம்பலகுரின் இயற்பெயர் கனகசபை'.