பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/81 பொன்னம்பலஞரோடு நானும் பொன்னடியும் வெளியில் கிளம்பிளுேம். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயிற்சி யாளராக (House surgeon) இருந்த செல்வி. ஞானம் என்ற பெண்ணைப் பார்ப்பதற்காகச் சென்ருேம். அந்தப் பெண் பொன்னம்பலஞரின் நெருங்கிய நண்பரின் மகள். செல்லும் வழியில் பொன்ன்ம்பலஞர் எங்களை நோக்கி "புரட்சிப் பாவேந்தரைt நீங்கள் கண்ணுங் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் இந்நாட்டின் சொத்து. தனியாக அவரை உந்து வண்டிகளில் ஏறிச் செல்லும்படி அனுப்பாதீர்கள். அவருடன் யாராவது துணையாகச் செல்லவேண்டும். அவர் குழந்தையைப் போன்றவர்’ என்றெல்லாம் கூறிக் கொண்டு வந்தார். ,口 30–4—62 வெள்ளி [] இன்று பாவேந்தர் இல்லத்தில் தமிழ்க் கவிஞர் பெருமன் றத்தின் செயற்குழுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது. கவிஞர் வேழவேந்தன், தமிழழகன் ஆகியோர் வருகை தந்திருந்தனர். இச்செயற்குழுக் கூட்டம் தமிழ்க் கவிஞர் பெருமன்றச் சார்பில் சித்திரை முதல்நாள் குயில்’ கவிதை இதழை வெளியிட முடிவு செய்தது. கூட்டத்துக்கு வந்திருந்த கவிஞர்கள் சென்ற பிறகு நானும் பாவேந்தரும் உணவருந்திவிட்டுப் பேசிக் tபொன்னம்பலஞர் பாரதிதாசனுரை எப்போதும் "புரட்சி பாவேந்தர்' என்றே குறிப்பிடுவார். கவிஞர்' என்ற சொல்லைப் பயன்படுத்த் மாட்டார். கவிஞர் வடசொல் என்பது அவர் கருத்து.