பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியாரும் பாவேந்தரும் பார்த்தவர்களை மலைக்க வைக்கும்படியான தோற்றம் பாவேந்தர் தோற்றம். அவர் குனிந்திருந்ததை யாரும் பார்த்திருக்கமுடியாது, நின்ருலும் உட்கார்ந்திருந்தாலும் அவருடைய ஞ்சும் தலையும் நிமிர்ந்தே இருக்கும். ஆல்ை பாரதியைப் பற்றிப் பேசும்போது மட்டும் அவர் தோற்றத்தில் ஓர் ஒடுக்கமும், பேச்சில் ஓர் அடக்கமும் தோன்றியதை நான் கவனித்திருக்கிறேன். ஒருநாள் பாவேந்தரோடு நான் பேசிக்கொண்டிருந்த போது 'பாரதியாருக்கும் உங்களுக்கும்இருந்த தொடர்பு பற்றிக் கூறுங்கள்' என்று கேட்டேன். உடனே பாவேந் தர், "பாரதியார் பற்றி நானே ஒரு நூல் எழுதிக் கொண்