பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/86 டிருக்கிறேன். எனவே பாரதியார் பற்றி என்னிடம் எது வும் கேட்காதே. என்னைப் பற்றி மட்டும் கேள்,' என்று கூறிஞர். அதற்குப் பிறகு பாரதியாச் பற்றி அவரிடம் நான் எதுவும் கேட்டதில்லை. என்ளுேடும், மற்றவர்க ளோடும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அவரே தற்செய லாகக் கூறிய சில செய்திகளை மட்டும் அவர் கூறியது போலவே கீழே தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். O "பாரதியார் கி.பி. 1908 இல் புதுச்சேரி வந்தார். அவர் புதுச்சேரி வந்து ஓரிரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் அவ ருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. பாரதியாரோடு பழக்கம் ஏற்பட்ட நேரத்தில் நான் இருபது வயதுக்காளை. சரியாகச் சொன்னுல் முரட்டுக்காளே. நான் அரசியல் கழ கம், சண்டைக் கழகம் (மற்களம்), புலவர் கழகம் ஆகிய எல்லாவிடத்திலும் இருப்பேன். என் தோற்றமே பார்ப்ப தற்கு முரட்டுத் தனமாகத்தான் தெரியும். கையில் தங்கக் காப்பும் கழுத்தில் கருப்புக் கயிறும்,மேனி தெரியும் மல் ஜிப் பாவுமாக எப்போதும் 'வஸ்தாது போல் திரிந்து கொண் டிருப்பேன். என் நடையுடை பாவனைகளில் ஒரு பண்பட்ட நிலை அப்போது ஏற்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மற்களத்தில் முறையாகப் பயிற்சி செய்யத் தொடங்கியிருந்ததால், உடற்கட்டும் நன்ருக இருந்தது. பாரதியாசின் தோற்றமும், வெளிப்படையான போக்கும் என்னை அவர்பால் இழுக்கத் தொடங்கின. அவர் தொடர்பு என் பழக்க வழக்கங்களிலும், சிந்தனையிலும் என்னை அறியாமலே சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதைக் காலப் போக்கில் நானும் உணரத் தொடங்கினேன். பழமைப் போக்கிலும், செக்கு சுற்றும் கவிதைப்பாணியிலும் ஊறிப் போயிருந்த எனக்கு பாரதியாரின் அஞ்சாமையும், எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் காலத்துக்கு ஒவ்வாததை அலட்சியமாக