பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/91 பாராட்டினர். வெட்கம் கலந்த நாணத்தோடு நான் சிரித்தேன். D பாரதியாரைப் பற்றிப் பாவேந்தர் வாயிலிருந்து நான் அறிந்து கொண்ட செய்தி இவ்வளவுதான். ஆளுல் பாரதி யாரின் வாழ்க்கை வரலாற்றை எப்படியாவது விரைவில் எழுதிமுடித்துவிட வேண்டுமென்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். பாவேந்தர் இறந்தவுடன் அடுத்தவாரம் வெளியான ஆனந்தவிகடனில், அவர் பாரதியாரைப் பற்றி எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகியது. பாவேந்தரின் படத்தோடு அக்கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள்; புதுவையில் இருந்த பாரதியின் குடும்ப வாழ்க்கையை அதில் மிக அழ காக எழுதியிருந்தார். சென்னைத் தியாராகய நகர் இரா மன் தெருவில் பாவேந்தர் வாழ்ந்தபோது, ஆனந்த விக டன் ஆசிரியர் திரு. எஸ்.எஸ்.வாசனே ஒரு முறை நேரில் வந்து பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து விகடனில் எழுதும்படி கேட்டுக் கொண்டாராம். பாவேந்த ரும் இசைந்து ஒரு கட்டுரை அனுப்பிவைத்தார். பிறகு என்ன நினைத்தாரோ தொடர்ந்து எழுத மறுத்து விட் டார். தொடர்ந்து எழுதியிருந்தால் பாரதி வரலாற்றின் நுட்பமான சில பகுதிகள் நமக்கு வெளிச்சமாகியிருக்கும். பாரதி வரலாற்றை ஆயிரம் பேர் எழுதியிருக்கலாம். இன் னும் எழுதலாம். ஆளுல் ஒரு கவிஞன் தான் மதித்துப் பழ கிய மற்ருெரு பெருங்கவிஞனைப் பற்றி எழுதும் எண்ண ஓட்டங்கள் மற்றவர் சிந்தனைக்கு எட்டாதவையாவும், படிப்போர்க்கு வியப்பூட்டுபவையாவும் இருக்கும். அத்த கைய வரலாற்றுக் காவியம் நமக்குக் கிட்டாமல் போனது பேரிழப்புத்தான். தாம் ஆனந்த விகடனில் எழுத மறுத்து விட்ட செய்தியைப் பாவேந்தரே ஒருமுறை என்னிடம் கூறிஞர். 'ஏன் மறுத்து விட்டீர்கள்?' என்று நான் கேட்ட தற்கு முகத்தைச்சுளித்துக் கொண்டாரே தவிர மறுமொழி