பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ “இந்தக் காவியத்தில் ஒர் அலங்காரமாகவோ, புதுமை நோக்கும் போக்காகவோ இயங்காமல் காவியக் கருத்தின் இயைபு கெடாத உயர்-உத்தியாக சர்ரியலிசம்' கையாளப்பட்டுள்ளது. "ஞானக் கூத்தன், அப்துல் ரகுமான், தருமு சிவராமு போன்ற தமிழ்க் கவிஞர்கள் சர்ரியலிசத்தைப் படிமமாகவும், உத்தியாகவும், அபத்த அடிக்கருத்தாகவும் (Absurdthemes) கவிதைகளில் கையாண்டு இருந்தாலுங் கூட, ஒரு காவியத்தின் இயைபு கெடாத வகையில் சர்ரியலிசத்தைப் பயன்படுத்தியுள்ள முதற்கவிஞர் முருகுசுந்தரம்தான்” garajogi (dreams), 177soupscir (hallucinations), 2 (5 t DfTfögmik15Git (transformations), SgólufG)3,6ir (Symbols), அபூர்வப் படிமங்கள் (marvel images), வியப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சர்ரியலிச எழுத்தாக வெள்ளை யானை அமைந்துவிட்டது. “தமிழ்க் கவிதை வரலாற்றில், இந்தக் காவியம் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகிவிட்டது’’ என்று கூறியுள்ளார். மீமெய்ம்மைக் கவிதைகளுள் இருண்மை எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு ஞானக்கூத்தனின் விநோதக் கற்பனைக் கவிதையொன்றைக் காணலாம். . அப்பாவும் பிள்ளைகளும் உட்கார்ந்திருந்தார்கள் உறுப்புகளைப் புறம் போக்கிப் படுத்துக் கொண்டாள் வள்ளிக் கிழங்கின் பதமாக வ்ெந்து போன அவள் உடம்பைப் பிட்டுத் தின்னத் தொடங்கிற்று