பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சுந்தரம் 一图 ஆவேசம் திரிந்து அபத்தமாக உருக்கொண்டது ஒலிஒளிக் காட்சி முடிந்து நினைவு எதுவுமின்றித் திரும்பும் கூட்டம் இலை பூ பறவைக்கூடு என்ற பேதம் மரத்து மழுங்கி நின்றன சாலையோர மரங்கள் இலக்கு மறந்து எதிர்எதிர் பாய்ந்து தன்னைத்தான் முட்டிக்கொண்டு கல்லாய் நின்றது காற்று புலன்களிடையே இடைவெளி நெடிதானது இடைவெளியில் புரண்டு சாம்பல் மணக்கக் கிடந்தது இரவு மூளையின் அறைக்குள் அசடு கணத்தது வெட்ட வெளியில் முன்னால் போகவும் பின்னால் போகவும் ஒரே நேரம் அடியெடுத்து வைத்தபோது நான் பார்த்தது; ஆகாயம் நோக்கி கைகளைத் தலைகளை ஆட்டிப் பேசத் தொடங்கினர் ஆணும் பெண்ணுமாய் அறுபது எழுபது பேர் வெவ்வேறு நிலைகளில்