பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேந்தர் படைப்பில் அங்கதம் உட்கார்ந்தபடி வெளிச்சம் இளித்தது மேலோட்டமாகப் படிப்பவர்க்குத் தலைப்புக்கேற்ப, இப்பாடல் ஓர் அபத்தக் களஞ்சியமாகத் தோன்றலாம். இதன் பூட்டை ஆசிரியர்தான் திறக்க வேண்டும். திறந்தால் சுவையான நனவோடைக் காட்சிகள் நம் கண்முன் தோன்றலாம். படிமவியல் சில கவிதைகளில் கையாளப்படும் உருவகங்களும் இருண்மையைத் தோற்றுவிப்பதுண்டு. வெவ்வேறு உருவகங்களைப் படிமங்களாக அடுக்கிக் கொண்டு செல்லும் போது, அப்படிமங்களின் தொடர்பே நமக்குக் கருத்துப் புலப்பாடாக அமையும். கவிஞர் தமிழன்பனின் பாரம் சுமப்பவர்கள் என்ற கவிதையைக் காண்போம். வீணையை வீசி எறிந்துவிட்ட வெள்ளைத் தாமரையாளுக்கு - இப்போது இந்தக் கிதார்களில் தான் கிறுகிறுப்பு கல்விக் கடவுளான வெள்ளைத் தாமரையாள் ஏன் இன்று வீணையை வீசி எறித்துவிட்டுக் கிதாரைக் கையிலெடுத்துக் கொண்டாள்? நாம் புருவத்தை உயர்த்துகிறோம். வெள்ளைத் தாமரையாள் கல்வியின் உருவகம். வீணை தாய்மொழிக் கல்வியின் உருவகம், கிதார் ஆங்கில வழிக் கல்வியின் உருவகம். இதை எப்படிப் புரிந்து கொள்வது? அடுத்த படிமத்தைத் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது நமக்குக் கருத்து புலப்படுகிறது.