பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சந்தரம் -இ அறிந்து கொள்ளுதல் என்பதைவிட, உள்ளுணர்வால் உணர்ந்து கொள்ளுதலே இயலும் என்று கூறுகிறான். கவிஞர் ஆர். கே. என்பவர் என் நண்பர். அவரது ‘உயிர்த்திரு’ என்ற கவிதைத் தொகுப்பை நான் புரட்டிக் கொண்டிருந்தபோது வலி' என்ற தலைப்பில் ஒரு கவிதை கண்ணில் பட்டது. - என்னுடையவள் தேவதைபோல் எல்லாம் இல்லை தரையில் பாவாத கால்கள் இல்லை சிமெண்ட்தரை அறிந்த பாதங்களே சேற்றுப்புண் கூட உண்டு. மேகத்தைவிட மெல்லிய தேகமெல்லாம் இல்லை பேசுவதும் கவிதையில்லை பெரும்பாலும் சினிமாக் காரிகளைப் பற்றித்தான் நேற்று முட்டாள் தனமாகக் கொதிக்கின்ற நீரைக் காலில் நான் கொட்டிக் கொண்ட போது தோல் நீங்கிய என் கால் எலும்பில் வெள்ளையாகத் தெரிந்த அவள் வலி - பாடல் எளிமையானது. ஆனால் கடைசி நான்கு வரிகளில் கவிஞர் எதைக் குறிப்பிடுகிறார் என்று புரியவில்லை. நேரில் சந்தித்தபோது அவரையே விளக்கம் கேட்டேன். அவர் சொன்னார்: “ஒரு நாள் முகத்துக்கு ஆவி பிடித்துக் கொண்டிருந்தபோது கொதிநீர் தவறிக் கொட்டி என்கால் வெந்துவிட்டது. மேல்தோல் விரிந்து விரல்எலும்பு வெண்மையாக வெளியே தெரிந்தது. சத்தம் கேட்டு ஒடி