பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- பாவேந்தர் படைப்பில் அங்கதம் வந்த என் மனைவி இக்காட்சியைக் கண்டு வீறிட்டலறினாள். அவள் உணர்ச்சி வசப்பட்டு அலறிய ஒசை என்னைத் திடுக்கிடச் செய்தது. “சராசரிப் பெண்ணான அவள், தன் கணவன் மீது கொண்டிருந்த பாசத்தை வெளிப்படுத்தும்போது அவள் சிறப்பு எனக்குப் புலப்பட்டது. என் கால் எலும்பு வெள்ளையாக வெளியே தெரியாமலிருந்தால் அவள் பாசத்தின் ஆழத்தை நான் புரிந்துகொண்டிருக்க முடியுமா? அதனால்தான், என் கால் எலும்பில் வெள்ளையாகத் தெரிந்தது அவள் வலி என்று பாடினேன்" என்றார். இங்கு வெள்ளையாக' என்பதற்குப் பளிச்சென’ என்றும் பொருள் கொள்ளலாம். செயற்கை ஞான தரிசனங்கள் gang, gyāsāa śāb Derangement of sensibility grain so. சில கவிஞர் மதுவும் கஞ்சாவும் அபினும் அருந்திவிட்டுத் தமது இயல்பான மனநிலையைச் சிதைத்து Gau DiLl i Gjiro offigoń13;&#373 (mystical experience) முயற்சிப்பதுண்டு. அத்தகைய முயற்சிகளில் பிரெஞ்சுக் கவிஞர்களான போதலேரும், ரேம்போவும், ஆங்கிலக் கவிஞரான காலரிட்ஜும் ஈடுபட்டனர். போதலேர் தம் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்களையும், அவஸ்தைகளையும் மறக்க, போதைப் பொருளை உண்டு, தம் மனநிலையைச் சிதைத்துத் தாமே ஒரு சொர்க்கத்தைப் படைத்துக் கொண்டு அதில் சஞ்சரிக்கலானார். ரேம்போவின் படைப்புக்களில் குடிபோதைப் படகு’ (Thedrunkenboat) என்ற கவிதை மிக்க விளம்பரம் பெற்றது.