பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சுந்தரம் 一囚 வாழ்க்கையில் ஏற்பட்ட குமுறல்கள், மன விகாரங்கள், வன்முறைகள் யாவும் இப்பாடலில் கொந்தளிக்கும் கடலாக உருவகம் செய்யப்பட்டுள்ளன. அக்கடலில் சிக்கித் தள்ளாடும் படகாகத் தன்னைக் கற்பனை செய்கிறான் ரேம்போ. கஞ்சாவும் அபினும் தம்மை உண்டவர்களை மதிமயக்கி, ஒரு கனவு நிலையைத் தோற்றுவித்து, அவர்கள் விரும்புகிறபடி சிந்தனையைச் செலுத்தும் ஆற்றல் வாய்ந்தவை. அக்கட்டுப்பாடற்ற சிந்தனையின் வெளிப்பாடுகளே காலரிட்ஜின் குப்ளாய் கானும், பாரதியின் குயில் பாட்டும். - இத்தகைய பாடல்களில் இயல்புநிலையை மீறிய கற்பனைகள் தோன்றுவதால் அவற்றுள் இருண்மை இடம் பெறுகிறது. பாரதியின் குயில்பாட்டு மொழி அளவில் தெளிவாக இருந்தாலும், குயில், குரங்கு, மாடுகளின் தோற்ற நிகழ்ச்சியும் செயலும், பேச்சும், இருண்மைக்குக் காரணமாகின்றன. பாவலர்க்குப் பட்டப்பகலில் தோன்றும் நெட்டைக் கனவு நிலையிலிருந்தே குயில்பாட்டைப் பாடியதாகப் பாரதியே ஒப்புக் கொள்கிறார். முடிவுரை இருண்மை கவிதையில் ஓர் உத்தி. ஆனால் அதுவே கவிதை அன்று. இருண்மை கவிதையில் ஆர்வத்தையும், வியப்பையும், கவர்ச்சியையும் தூண்டிவிடுகிறது. இருண்மை படிந்த கவிதை, மிகச் சிறந்த கவிதையாகவும் இருக்கலாம்.