பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- பாவேந்தர் படைப்பில் அங்கதம்-இ-) கிருஷ்ணனும் இராதையும் யமுனைக்கரைப் பிருந்தாவனக் காதலர்கள். கண்ணனும் நப்பின்னையும் தமிழ்நாட்டு முல்லைவனக் காதலர்கள். இராதையும் நப்பின்னையும் என்ற கட்டுரை இவர்களைப் பற்றிய சிறு ஆய்வு. என்னதான் இ லக்கியத் தில் நம் உள்ளம் படிந்திருந்தாலும், நாட்டின் தினசரி நடப்புகள் நம்மையும் அறியாமல் நம் உள்ளத்தை உசுப்பிவிடுகின்றன. அப்போது அரசியலையும் ஊறுகாய் போல் தொட்டுக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அப்படி எழுதப்பட்ட தினமணி' நடுப்பக்கக் கட்டுரைகள் சிலவும் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன. 4/100, கான்வெண்ட் வீதி, முருகு சுந்தரம் அழகாபுரம் வடக்கு சேலம் - 636 016.