பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ நடந்து கொள்வதும், இம்மனமயக்கத்தின் பாற்பட்ட கொடிய நோய்கள் ஆகும். எனக்குத் தெரிந்த பேராசிரியர் ஒருவர் கல்லூரிக்குச் செல்லும்போது, தம் மனைவியை வீட்டிற்குள் பூட்டி வைத்து விட்டுச் செல்வதையும், தம் குழந்தையின் உருவ ஒற்றுமையைப் பக்கத்து வீட்டுக்காரனோடு தொடர்பு படுத்திப் பேசுவதையும், மனைவி கோயிலுக்குச் சென்று திரும்பினால் எவனோடு சுற்றிவிட்டு வருகிறாய்? என்று ஈவிரக்கமில்லாமல் பேசுவதையும் நான் அறிவேன். மக்கள் வாழ்க்கையில் அங்கொன்றும், இங்கொன்றுமாகக் காணப்படும் இந்நோய் எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரின் சிந்தனையில் சிக்கிக் காப்பியங்களாகவும், புதினங்களாகவும், சிறுகதைகளாகவும் உருப்பெற்றிருக்கின்றன. அவற்றுள் மகாகவி சேக்ஸ்பியர் எழுதிய ஒதெல்லோ குறிப்பிடத்தக்க ஒரு நாடகக் காப்பியம் ஒதெல்லோ மூர் இனத்தைச் சேர்ந்தவன். சேக்ஸ்பியர் வாழ்ந்த பதினாறாம் நூற்றாண்டில் கறுப்பு நிறத்தவர் எல்லாரையும் மூர்’ என்றே ஐரோப்பியர் குறிப்பிட்டனர். "ஒதெல்லோ ஒரு மெளரிடானிய முரட்டுக்குதிரை (aBarbary horse from mouritonia) arsirpi Gråsiv Dugtrsö gyffi ġĝsb குறிப்பிடப்படுவதால், இவன் ஆப்பிரிக்காவின் வடமேற்குப் பகுதியில் உள்ள மெளரிடானியாவைச் சேர்ந்தவன் என்பது புலனாகிறது. அராபியர் மற்றும் வட ஆப்பிரிக்க பார்பரி கரைப்பகுதியில் வாழ்ந்த கருப்பர் கலப்பால் தோன்றிய புதிய இனமே மெளரிடானிய மூரினம். இம்மூரின மக்கள் ஸ்பெயின் நாட்டைக் கைப்பற்றிப் பலநூற்றாண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்தனர். மூர் இனத்தவர் பெரும்பாலும் இசுலாத்தைத் தழுவியவர்கள். ஆனால் ஒதெல்லோ ஞானக் குளியல் பெற்றுக் கிறித்தவன் ஆனவன். வெனிசு நாட்டுப் படையில் சாதாரணப் போர்வீரனாகச் சேர்ந்து, தன் வீரத்தாலும்