பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- பாவேந்தர் படைப்பில் அங்கதம்-இ அஞ்சாமை மிக்க போர்ச் செயல்களாலும், உண்மை ஊழியத்தாலும் படைத்தலைவனாக உயர்ந்தவன். இவன் தன்னை ஒர் அரச குடும்பத்தில் பிறந்தவன் என்று கூறிக் கொள்கிறான். மூர் இனத்தவருள், ஒரு குழுத் தலைவனின் மகனாக இவன் பிறந்திருக்கலாம். சேக்ஸ்பியர் நாடகத் திறனாய்வாளர்கள், ஒதெல்லோவின் பண்புகள் பற்றிக் கீழ்க்கண்ட கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர் : “ஒதெல்லோ கறுப்பானவன்; ஆனால் ஆப்பிரிக்க நாட்டுச் சூரிய ஒளி பளபளக்கும் பெருமிதமான தோற்றம் உடையவன். கட்டுப்பாடும், கடமையுணர்வும், தன்னடக்கமும், கடுமையான உழைப்பும், ஆபத்து மிகுந்த போர் அனுபவங்களால் வயிரம் பாய்ந்த நெஞ்சுரமும், பலநாடுகள் சுற்றிய பட்டறிவும் மிக்கவன்; தன்னுடைய தகுதியை உணர்ந்தவன்; நாட்டுக்கு ஆற்றிய தன்னுடைய தொண்டை எண்ணிப் பெருமைப்படுபவன், பகட்டுக்கு அடிபணியாதவன்; பட்டம் பதவிகளுக்கு மயங்காதவன்; எளிதில் பொறாமைப் படாதவன்; பொறாமைப் பட்டு விட்டாலோ, அதன் எல்லைக்கே செல்லும் இயல்புடையவன்!” சேக்ஸ்பியர் படைத்த காப்பியத் தலைவர்களுள் காதலும் வீரமும் மிக்க தலைவன் (Romantic Hero) இவனே. பரந்த பாலைவனத்திலும், கடல்கடந்த நாடுகளிலும் பல போர் முனைகளைச் சந்தித்திருக்கிறான்; சிறுவனாக இருந்தபோது அடிமையாக விற்கப்பட்டு, மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறான்; அலெப்போவில் யாருமற்ற அனாதையாகக் கைவிடப்பட்டிருக்கிறான்; இவன் போர் அனுபவங்களும், பயண அனுபவங்களும் விசித்திரமானவை: ᏭᎮ6üᎠ©ᏗᏓl JFᎢ©öᎢ❍©Ꮧ, ஹேம்லட்டைப்போல ஒதெல்லோ ஆழமான சிந்தனை யோட்டமோ, ஊசலாட்டமோ இல்லாதவன்.