பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


|114; முருகு சந்தரம் -இ இருண்டுவிட்டது” என்று கூறி வருத்தப்படுகிறான். இவை அவன் அடிமனத்தில் ஒட்டிக் கொண்டிருந்த தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடுகள் பிரபான்சியோ தன் மகளை ஒதெல்லோவிடம் ஒப்படைக்கும்போது, “ஒதெல்லோ! என் மகள் மீது கொண்டிருக்கும் காதலில் குருட்டுத்தனமாக இருந்துவிடாதே! இவளைக் கூர்ந்து கவனித்துக் கொள். இவள் பெற்று வளர்த்த தந்தையையே ஏமாற்றியிருக்கிறாள். சமயம் நேர்ந்தால் உன்னையும் ஏமாற்றத் தயங்க மாட்டாள்” என்று எச்சரிக்கிறான். இந்த எச்சரிக்கை ஒதெல்லோவின் உள்ளத்தில் ஒரு மூலையில் பதிவாகிவிட்டது. இதுவே அவன் மனமயக்க நோயின் வித்து. அவன் தாழ்வுணர்ச்சிகள், அந்த வித்துக்கு நீர்பாய்ச்சி முளைக்கச் செய்தன. இயாகேர் அதை எருவூட்டி வளர்த்தான். “டெஸ்டிமோனா தனது இனத்தையும், நாட்டையும், தனது தரத்திற்கு ஏற்ற ஆடவரையும் புறக்கணித்து ஒரு கருத்த மூரினத் தலைவனை மணந்து கொண்டது இயற்கைக்கு மாறானது; முரண்பாடு உடையது. இதைப் பற்றிச் சிந்திக்கும்போது ஓர் உண்மை புலப்படுகிறது. காலப்போக்கில் அவளுக்கு உங்கள் மீது சலிப்பு ஏற்பட்டு, வெனிசு நாட்டு அழகிய இளைஞர்களோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்துத் தன் அவசர முடிவுக்கு வருந்தியிருக்கலாம் அல்லவா? அத்தகைய வருத்தமே அவள் கவனத்தைக் காஸியோவின் பக்கம் திருப்பியிருக்கலாம் எனறு அஞ்சுகிறேன். “வெனிசில் உள்ள பெண்கள் தங்கள் பாவத்தைக் கடவுள் அறியச் செய்வார்கள்; ஆனால் கணவன் அறியாமல் மறைப்பார்கள். அவர்கள் மனச்சாட்சி என்பது துரேர்கம் வெளிப்படாமல் மறைப்பதே ஒழியத் துரோகம் செய்யாமல் இருப்பது அன்று!”