பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு கத்தரம் -இ டெஸ்டிமோனா படுக்கையில் சாகும் நிலையில் கிடக்கிறாள். ஒதெல்லோ அருகில் நின்று கொண்டிருக்கிறான். அப்போது உள்ளே வந்த பணிப்பெண் எமிலியா இக்கொடுமையைச் செய்தது யார்?' என்று கேட்டுக் கதறுகிறாள். "ஒருவருமில்லை. நானேதான் வருகிறேன்; என் வணக்கத்தை என் கணவருக்குச் சொல்' என்று கூறிவிட்டு டெஸ்டிமோனா உயிர்துறக்கிறாள். “இல்லை! நான்தான் அவளைக் கொன்றேன். துரோகி சாகும்போது கூடப் பொய் பேசுகிறாள்; எரியும் நரகத்துக்குத்தான் போவாள்!” என்று இரக்கமில்லாமல் பேசுகிறான் ஒதெல்லோ, ஒதெல்லோவின் மனநோய் அவன் உள்ளத்தை இருட்டாக்கிவிட்டது. தன் மனைவி ஒழுக்கம் கெட்டவளாக இருந்திருந்தால், சாகும் கடைசி நேரத்தில், கணவன் குற்றத்தையும் மறைத்ததோடு அன்பு வார்த்தைகளால் வணக்கம் கூறி விடை பெறுவாளா என்று அவன் உள்ளம் சிந்திக்க மறுத்துவிட்டது குறிப்பு விளக்கம் 1. Shakespearean Tragedy - othello 2. Shakespearean Tragedy - othello 3. Shakespearean Tragedy- othello - by Bradley