பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பின் அங்கதம் (8) இராதையும் நப்பின்னையும் கடவுளைக் காதலனாக எண்ணி வழிபடுவது நாயக நாயகி பாவம்' என்று வடநூலாரால் கூறப்படுகிறது. இவ்விலக்கிய மரபு பழமையான சங்கத் தமிழ் இலக்கியங்களில் இல்லை. திருவாசகத்திலும், இடைக்காலச் சிறுபிரந்தங்களிலும், அருட்பாத் தனிக்கீர்த்தனைகளிலும், இசைப்பாடல்களிலும் இவ்வழக்கு காணப்படுகிறது. இந்த நூற்றாண்டில் பாரதியின் கண்ணன் பாட்டு, நாயக நாயகி பாவத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு வட இந்தியாவில் பரவலாக வணங்கப்படும் கிருஷ்ணன், தெய்வாம்சம் பொருந்திய மானுடக் காதலனாக எல்லாக் கன்னியராலும் கருதப்பட்டு வழிபடப் படுகிறான். உத்திரப் பிரதேசத்தில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள மதுரா (வடமதுரை) கிருஷ்ணனின் பிறப்பிடம் அரச குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணன், அரசியற் காரணங்களால் யமுனையின் மறுகரையில் இருந்த, ஆயர்சேரி (கோகுலம்)யில் வளர்க்கப்பட்டான். ஆயர்குலத் தலைவனான நந்தகோபன் வீட்டில் வளர்ந்த கிருஷ்ணன், கறுத்த நிறத்தவனாக இருந்தாலும் அழகன். கிருஷ்ணன் என்றாலே கறுப்பன்' என்று பொருள். இஃதோர் காரணப் பெயர். கருநாகத்தைக் கிருஷ்ண சர்ப்பம்’ என்று குறிப்பிடுவதுண்டு. ஆயர்குலத் தலைவன் மகனான கிருஷ்ணன், கோகுலத்தின் செல்லப்பிள்ளை. தன் பால்லிய