பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -2) லீலைகளாலும், கேட்பவர் உள்ளத்தை மெய்மறக்கச் செய்யும் தன் புல்லாங்குழல் இசையாலும், ஆடுமாடுகளை மட்டுமன்றிக் கோகுலத்துப் பெண்களையும் பிணித்துவிட்டான். அவன் இசையில் மயங்கிய இடைக்குலத் தாய்மார்கள் அவனைத் தன் சொந்தப் பிள்ளையாகவும், கன்னிப் பெண்கள் தம் சொந்தக் காதலனாகவும் கருதி அவன் பின்னால் திரிந்தனர். ஆயர்குலப் பெண்களைக் கோபியர்’ என்று கூறுவது மரபு. கோபியருள் இராதை என்பவள் சிறந்த அழகும், விரும்பத்தக்க நற்பண்புகளும் வாய்க்கப் பெற்றவள். இராதைக்கும், கிருஷ்ணனுக்கும் இடையில் நிலவிய காதல் உறவு, பாகவதம், பிரம்ம வைணவார்த்த புராணம், கீதகோவிந்தம், வித்யாபதியின் காதற்கவிதை ஆகிய இலக்கியங்களிலும், மதுராவைச் சுற்றி வழங்கும் கிராமியக் கதைகளிலும், மக்கள் திருமணம் முதலிய முக்கிய நிகழ்ச்சிகளில் பாடும் இசைப் பாடல்களிலும் பரவலாகப் பேசப்படுகின்றன. கிருஷ்ணனும் இராதையும் வழக்கமாகச் சந்திக்கும் இடம், கோகுலத்துக்கு அருகில் உள்ள பிருந்தாவனம் என்னும் சோலை, பாகவதத்தைப் பொருத்தவரையில் கிருஷ்ணன் - இராதை உறவு கோகுலத்தோடு முற்றுப் பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணன் தன் கோகுல வாழ்க்கையை முடித்துக் கொண்டு, மதுரா புறப்பட்டபோது இராதை தன் கண்ணிரைக் காட்டி வழிமறிக்கிறாள். "நீங்கள் எப்போதும் என்னிடமே இருக்கவேண்டும்; நான் இல்லாமல் எப்போதும் தனியாக பிருந்தாவனம் செல்லக்கூடாது' என்று இராதை நிபந்தனை விதிக்கிறாள். உடனே பிரம்மாதி தேவர்கள் இராதைமுன் தோன்றி 'இராதை நீ எங்கள் தாய்! கிருஷ்ணன் இல்லாமல் உலகம் இய்ங்காது. உலகின் நன்மை கருதிக் கிருஷ்ணனை விட்டுவிடு' என்று வேண்டிக் கொண்டபின் இராதை