பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு கந்தரம் -இ உன் தோள்களால் என்னைக் கட்டு உன் தொடைகளால் என்னைக் காயப்படுத்து. பால் மணக்கும் உன் மார்புகளால் என் மூச்சட்க்கு என்று பாடுகிறார். இப்பாடல் இராதையின் தாய்மையைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகிறது. பிருந்தாவனத்தில் இராதாகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. கோகுலாஷ்டமி இங்குப் பதினைந்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வடக்கில் வணக்கம் சொல்லும்போது பொதுவாக ராம் ராம் என்று சொல்லுவார்கள். ஆனால் பிருந்தாவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மற்றிலுர்க்கு வணக்கம் செல்லும்போது ராதே கிருஷ்ண’ என்று கூறும் வழக்கம் இன்றும் நிலவுகிறது. வங்காள நாட்டில் பர்த்வான் மாவட்டத்தில் கெண்டோலி என்னும் இடத்தில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஜெயதேவர் என்னும் கவிஞர். பாகவதம் பத்தாவது காண்டத்தில் உள்ள கிருஷ்ணன் இராதை பற்றிய செய்திகளோடு, நாட்டிலும் ஏட்டிலும் வழங்கிவந்த பிறமொழிச் செய்திகளையும் திரட்டி, அவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு சமஸ்கிருத மொழியில் இசைப்பாடல்கள் பாடினார் ஜெயதேவர். அப்பாடல்களுக்குக் கீதகோவிந்தம் (கோவிந்தன் பாட்டு) என்று பெயர் சூட்டினார். இப்பாடல்கள் நாட்டியத்துக்கும் ஏற்றவை. ஒவ்வொரு பாடலிலும் எட்டு விதமான நாட்டியப் பதங்கள் இருப்பதால், இப்பாடல்கள் அஷ்டபதி என்று அழைக்கப்படுகின்றன.