பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் 121 ஜெயதேவரின் மனைவி பத்மாவதி சிறந்த ஆடலரசி. பூரி ஜகந்நாதர் கோவிலில் ஜெயதேவர் அஷ்டபதி பாட, பத்மாவதி அதற்கேற்பப் பதம்பிடித்து ஆடியதாக ஜெயதேவரே ஓர் அஷ்டபதியில் குறிப்பிடுகின்றார். வங்காளத்தில் பர்த்வான் பகுதியை ஆண்ட இலட்சும சேனர் அரசவையில் பஞ்சரத்னம்’ என்று போற்றப்பட்ட ஐந்து சிறந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராக விளங்கினார். இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கெண்டோலி சென்று அவர் பிறப்பிடத்தைத் தரிசித்து வருகின்றனர் - கீத கோவிந்தம் கருத்துக்காக அன்றி, அதில் காணப்படும் காதலோடு கலந்த இனிய இசைக்காகப் பெரிதும் பாராட்டப்படுகிறது. புத்தரின் வாழ்க்கையை ஆசிய ஜோதி (Light of Asia) என்ற பெயரில் காப்பியமாக எழுதிய ஆங்கிலக் கவிஞர் எட்வின் ஆர்னால்டு, GeguGgouffisir $45Garrastëzës ng “The Indian song ofsongs’ என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். ஓர் ஆங்கில அறிஞர் இந்நூலின் முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். ۔ The Gita Govindaisagreat poem agrippinglyricdramaandâ heartentrancing opera-allrolled into rapturous music. Like the song of songs in the old Testament, itisamystical allegory. “கிருஷ்ணன், மனிதன் தெய்வம் இரண்டுமானவன். அவனுடைய தெய்வீகத்தன்மை சில நேரங்களில் உறங்கிவிடுகிறது. உலக இன்பமாகிய போதையில் தன்னை மறந்துவிடுகிறான். இராதை தன் தெய்வீகஅழகால், நுட்ப அறிவால், பண்பு நலத்தால் அவனை மீட்டுப் பேரின்பக்