பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சுந்தரம் 一函 காதலுக்கு இட்டுச் செல்கிறாள்' என்பது கீத கோவிந்தத்தின் சாரம். கீத கோவிந்தத்தின் ஒர் அஷ்டபதி, இசைப் பாடலாகக் கீழே மொழி பெயர்த்துக் கொடுக்கப் பட்டுள்ளது. கிருஷ்ணனும் இராதையும் பிணக்கு நீங்கிப் பிருந்தாவனத்தில் சந்தித்தபோது, கிருஷ்ணன் அவள் கோபத்தை நீக்கப் பாடுகிறான் : இன்னுமென்னடி கோபம் - என்னை ஏறிட்டுப் பார்ப்பதன்றோ சல்லாபம் கன்னங்கரிய விழியால் - பின்னிக் கட்டிவிடு என்னைச் சுட்டது போதும் முன்னங்கை விலங்காலே - சுற்றி மோகத் தளையிட்டு மூச்சை நிறுத்து உன்னிரு கைச்சிறைக்குள்ளே - நான் ஒன்றி ஒடுங்கி உயிர்விடுவேனடி (இன்னும்) மணக்கும் மல்லிகை மொட்டு - உன்றன் மார்பில்விண் மீன்களாய்ஒளி விட்டு பிணக்கியுன் நெஞ்சத் துடிப்பைக் - கேட்கும் பேற்றினைத் தட்டிப் பறிக்குதென் செய்வேன்? சுணக்கமின்றியுன் இடையைக் - கவ்விச் சுற்றி வளைத்துக் கிடக்கும்.இம் மேகலை எனக்குப் போட்டியடி ராதே - நான் என்றைக்குன் மேனிக்கு மேகலை யாவேன்? (இன்னும்) அஞ்சு கணைகளைக் காமன் - உன் அழகினில் தீட்டி எடுத்தெடுத் தென்றன் நெஞ்சில் எறிவதைக் கண்டும் - உன் நேசக் கரங்களை நீட்டுதற் கொப்பாய் பஞ்சின் மெல்லடி யாளே - உன் பாதத் தலத்தில் இருந்தெழுந் துன்றன் கொஞ்சும் கரிய விழியை - இன்று கூர்ந்து நோக்கும் துணிச்சலைப் பெற்றேன் - (இன்னும்)