பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம -இ "கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையிலும் புல்லாளே ஆய மகள் என்ற முல்லைக்கலி வரிகள், காளையை அடக்கும் காளையர் வீரத்தை வியந்து பாராட்டுகின்றன. எனவே நப்பின்னை கதை தமிழ்நாட்டிலிருந்து வடநாட்டுக்கு ஏற்றுமதி ஆகி இருக்கலாம். 'கண்ணன்' என்னும் பெயர் வட இந்தியாவிலும் வழக்கிலிருந்தாலும், தமிழ் இலக்கியம் கிருஷ்ணனைக் 'கண்ணன்' என்றே எல்லா இடங்களிலும் குறிப்பிடுகின்றது. 'கண்ணன்' என்ற சொல் நம்நாட்டில் காதலனைக் குறிப்பிடும் குறிப்புச் சொல்லாகவே மாறிவிட்டது. காரி, நெற்றிச் செகில், மல்லல் மழவிடை, நுண்பொறி வெள்ளை, பொற்பொறி வெள்ளை, வென்றி மழவிடை, துநிற வெள்ளை ஆகிய ஏழுவிதமான முரட்டுக்காளைகளைக் கண்ணன் அடக்கிக் கொன்ற வீரவிளையாட்டு சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் சிறப்பாகப் பாடப்படுகிறது. 'காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ் வேரி மலர்க்கோதை யாள் தூநிற வெள்ளை அடர்த்தாற் குரியளிப் பூவைப் புதுமலராள் ; பின்னை அல்லது பிஞ்ஞை என்பது அவள் பெயர். அடைமொழியோடு கூடி (ந+பின்னை) நப்பின்னை என்று அவள் அழைக்கப்படுகிறாள். பின்னையொடு பலராமனும் கண்ணனும் குரவைக் கூத்தாடியதைச் சிலம்பு அழகாகப் பாடுகிறது.