பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் 125 "மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை ஆயவன் என்றாள் இளிதன்னை - ஆய்மகள் பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார் முன்னையாம் என்றாள் முறை சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாகிய ஆண்டாள், தன் பாவைப்பாட்டில் பல இடங்களில் நப்பின்னை பற்றிக் குறிப்பிடுகிறாள். நப்பின்னையை நந்த கோபாலன் மருமகள் என்றே பாடுகிறாள். உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்! (திருப்பாவை 18) குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்! - திருப்பாவை 19) செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே யெம்மை நீ ராட்டேலோ ரெம்பாவாய் திருப்பாவை 20) & குறிப்பு விளக்கம் 1. கீதகோவிந்தம் முதல் சருக்கம் சுலோகம் 1 2. வித்யாபதியின் காதற்கவிதைகள் தமிழில் டாக்டர் பாலாவின் மொழி பெயர்ப்பு - பக்கம் 41 முல்லைக்கலி - பாடல் 3 சிலம்பு - ஆய்ச்சியர் குரவை சிலம்பு - ஆய்ச்சியர் குரவை