பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- முருகு சந்தரம் -இ இராபர்ட் பிரெளனிங் சிந்தனைகள் ஆங்கிலப் பேரரசி விக்டோரியா மகாராணி கதிரவன் மறையாத ஆங்கிலப் பேரரசை ஆட்சி புரிந்த காலம். மகாகவி டென்னிசன் அரசவைக் கவிஞராக அமர்ந்திருந்து இலக்கிய ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலம். அப்போது பாராளுமன்றத்தை ஆட்டிப் படைத்த பிரபுக்கள் கோட்டையில் விரிசல் கண்டு தொழிலாளர் இயக்கம் துளிர்விட்டுக் கொண்டிருந்தது. பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையான காரல் மார்க்சு ஊர்பேர் தெரியாத முப்பது வயது இளைஞராக இலண்டன் நூலகங்களில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். டாக்டர் டார்வினின் பரிணாமக் கொள்கைகளும், ஃப்ராய்டின் அடிமனக் கோட்பாடுகளும் சமயவாதத்துக்குச் சவாலாக அணிவகுத்து நின்றன. அப்போது தேம்சு நதிக்கரையில் கேம்பர்வெல் என்ற இடத்தில் கி. பி. 1812ஆம் ஆண்டு இராபர்ட் பிரெளனிங் (Robert Browning) sportaş. பிரெளனிங்கின் தந்தை, தன் மகனை ஒர் இலக்கிய மேதையாக ஆக்க வேண்டும் என்று இளமை முதல் கனவு கண்டார். தன் மகன் கற்பதற்காக ஆறாயிரம் நூல்கள் அடங்கிய நூலகம் ஒன்றைத் தம் வீட்டிலேயே நிறுவியிருந்தார். பிரெளனிங் இலண்டன் பல்கலைக் கழகத்தில் சில திங்கள்களே மாணவனாக இருந்தான்.