பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேந்தர் படைப்பில் அங்கதம் ஆனால் கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல், தத்துவம் யாவற்றையும் வீட்டிலேயே இருந்து கற்க எல்லா ஏற்பாடுகளையும் அவனுடைய தந்தை செய்து கொடுத்தார். பழமை வாதத்தை உடைத்தெறிந்து புரட்சிக்குப் புதுக்குரல் கொடுத்த ஷெல்லியின் கவிதைகளில் பிரெளனிங்கிற்கு இளமை தொட்டே அளவுகடந்த ஈடுபாடு உண்டு. தமது முதல் கவிதை நூலில், சூரியச்சுடரே! என் வாழ்வின் ஒளியே நீதான் நீ தோற்றுவித்த வசந்தம் இளைஞர் உலகத்தை அழகு படுத்தியது உன் விடுதலை வேட்கையை நான் என் - சபதமாக ஏற்றுக் கொள்கிறேன் மக்களே கடவுளர்! மாநிலமே சொர்க்கம்! என்று ஷெல்லியின் கொள்கைக்குக் கட்டியம் கூறுகிறான் பிரெளனிங். ஆங்கிலத்தில் அளவிறந்த கவிதைகளை எழுதியவர்களுள் பிரெளனிங்கும் ஒருவன். அவன் படைப்புக்களில், -gaësiggI5lb @Loisio@15lb (Menand Woman) மணிகளும் மாதுளைகளும் (Bells and pomegranates) En så gaf Glomfissir (Dramatis Personae) கணையாழியும் புத்தகமும் (The ring and the book) என்பவை அழியாப் புகழ் பெற்றவை. பல்வேறுபட்ட செறிவான சிந்தனைகளும், கிளர்ச்சி யூட்டும் நாடகக் காட்சிளும், ஆழமான உணர்வுகளும், குமுழியிட்டுப் பொங்கி வழியும் ஊற்றுப் பேரழகும் கொண்டவை அவன் கவிதைகள்.