பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேந்தர் படைப்பில் அங்கதம் எழுந்தது செங்கதிர்தான் கடல்மிசை! அடடா எங்கும் விழுந்தது தங்கத் துாற்றல் வெளியெலாம் ஒளியின் வீச்சு என்று பாவேந்தர் பாரதிதாசன் கடல்மேல் எழுந்த கதிரவனைக் கண்டதும் துள்ளிக்குதித்துப் பாடுகிறார். அதே துள்ளலைப் பிரெளனிங்கின், காலைப் பிரிவு (Parting at Morning) என்ற பாடலில் காணலாம். கரையின் முனையைக் கடலலை சூழ்ந்தது மலை முகட்டில் - மாணிக்கப்பரிதி எட்டிப் பார்த்தான் தனக்காகக் கடல்மீது ஒரு தங்கப் பாலத்தைப் போட்டான் உலகமக்களே ஓடிவருக கண் கொள்ளா இக் காட்சியைக் காண! என்று மெய்மறந்து பாடுகிறான். இரவின் சந்திப்பு (Meeting at night) Graśrp Limi Göldi), வெள்ளைப் பணிக்கடல் ஒரத்தில் கருமையான கரை அடிவானத்தில் அழகிய மஞ்சள் நிலா குது கலித்துக் கொந்தளிக்கும் அலைகள் சுழித்து ஒடிக் கரையை நனைக்கின்றன முன்னோக்கி நகரும் படகின் முனையில் நின்று கண்களால் இக்காட்சியைக் கண்டு களிக்கிறேன் என்று நிலாக்கால இரவைக் கவிதையில் வடிக்கிறான் பிரெளனிங்.