பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் 134 எனது நாட்டில் பூக்கும் பொன் வண்ணக் கிண்ண்ப் பூக்களின் அழகின் முன்னால் இவ்வூரின் பகட்டான மெலோன் பூக்கள் எம் மாத்திரம்? என்று மெய்மறந்து பாடுகிறான். ஆங்கிலக் கவிஞர்களுள் காதலைப்பற்றி மிக உயர்வாகப் பாடியவன் இராபர்ட் பிரெளனிங். காதலை வெறும் உணர்ச்சியின் அடிப்படையில் அணுகாமல், உயர்ந்த கொள்கையின் அடிப்படையில் அணுகினான்; தன் வாழ்க்கையிலும் அதைக் கடைப்பிடித்தான். அவன் படைத்த பாத்திரங்கள் கூட, காதலை ஆடம்பரமாகவோ, ஆரவார்த்துடனோ வெளிப்படுத்தாமல் அமைதியோடும், சிந்தனைத் தெளிவோடும் மென்மையான குரலில் வெளிப்படுத்துகின்றன. வாழ்க்கையை வளப்படுத்தும் நம்பிக்கை உணர்வுடன் காதலை அணுக வேண்டும் என்பது அவன் கொள்கை. –9/ougu&&tb Grača Guž Guт (Elizebeth Barret) டுக்கும் இடையில் நிலவிய புனிதமான காதல், ஆங்கில இலக்கிய வரலாற்றில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முரட்டுத்தனமும் பிடிவாத குணமும் மிக்க ஒரு பணக்காரத் தந்தையின் மூத்தமகள் எலிசபெத். குதிரைச் சவாரியின்போது ஏற்பட்ட விபத்தில் முதுகெலும்பில் அடிபட்டு நிரந்தர ஊனமுற்று, சக்கரநாற்காலியில் தன் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்தாள். கவிதை அவர்களை ஒன்று சேர்த்தது. பிரெளனிங்கின் அறிவு பூர்வமான காதல், அவளுக்கு மருந்தாக மாறியது. காதலின் ஆற்றல் அவள் காலுக்கு