பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் ‘காதல் தத்துவம் (Love’s Philosophy) என்ற கவிதைக்கு ஒப்பாக இதைக் கூறலாம். ஒர்ஆண்டின் உயிர்ப்பையும் மலர்ச்சியையும் ஒரு தேனியின் கூட்டில் காணலாம் ஒரு சுரங்கத்தின் அதிசயத்தையும் செல்வத்தையும் பட்டைதீட்டப்பட்ட வைரத்தில் காணலாம் கடலின் பேரொளியை ஒருமுத்தின் இதயத்தில் காணலாம் இவை எல்லாவற்றையும்விட உண்மையும் நம்பிக்கையும் ஒளிமயமானவை உலகில் உயர்ந்த இவற்றை, எனக்காக, என் காதலியின் முத்தத்தில் பெறுகிறேன் என்று எலிசபெத்தின் காதலைப் பாராட்டிப் பேசுகிறான் பிரெளனிங். இதற்கொப்பான சங்கப்பாடல் ஒன்றைக் குறுந்தொகையில் காணலாம். நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே! பிரெளனிங், காதலின் சிறப்பைப் பாராட்டுவதோடு அமையாமல், அதன் நுட்பமான பரிமாணங்களையும் தன் படைப்பில் வெளிப்படுத்துகிறான். ஆந்திரே சார்தோ என்ற ஒவியன், அக்கலையை அறிவியல் பூர்வமாகக் கற்றுத் தேர்ந்தவன். அவன் மனைவி பேரழகி. ஆனால் அவனது நம்பிக்கைக்குரியவளாக அவள் அமையவில்லை. ஒருநாள் ஒவியம் தீட்டும்போது, ஒவியத்திற்குரிய மாதிரி (Model)யாக அவன் எதிரில் அவள் அமர்ந்திருக்கிறாள். அப்போது அவன் அவளிடம் கீழ்க்கண்டவாறு பேசுகிறான். 'அன்பே இந்த ஒவியத்தைப் பார். இது புகழ்பெற்ற ஓர் ஓவியன் தீட்டியது. குழந்தை இயேசுவை மடியில்