பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு கந்தரம் -இ சுமந்த மெடோனாவின் ஓவியம். இந்த ஒவியத்தின் கை சரியாக வரையப்படவில்லை. அக்குறையை நான் சரி செய்து விட்டேன். ஆனால் முகத்தில் காணப்படும் சாந்தமும் அமைதியும்.தெய்வீக ஒளியும் இந்த ஒவியத்தின் சிறப்புக்கள். இந்தச் சிறப்புக்களை என்னுடைய ஒவியங்களில் கொண்டு வரமுடியவில்லை. புகழ்பெற்ற ஒவியர்களான ரஃபேல், மைக்கேல் ஆஞ்சலோ ஆகியோரின் ஓவியங்களில் காணப்படும் (தெய்வீக) ஒளிக்குக் காரணம் என்ன தெரியுமா? அவர்களின் மனைவியர் தமது கணவர்களுக்கு உண்மையாக நடந்து கொண்டனர். அப்பெண்களின் கற்பும் நம்பிக்கையுமே அந்த ஒவியர்களின் வெற்றிக்குக் காரணங்கள். அத்தகைய வெற்றியை என்னால் அடைய முடியவில்லை. காரணம், எனது நம்பிக்கைக்கு உரியவளாக நீ நடந்து கொள்ளவில்லை. போ! உன் புதுக்காதலன் வெளியே இருந்து சீழ்க்கை அடித்துக் குரல் கொடுக்கிறான்' என்று பரிதாபமாகப் பேசுகிறான். உண்மையான காதலின் ஆற்றல் எவ்வளவு மகத்தானது என்பதை ஆந்திரே டெல் சார்தோ (Andhre Del Sartho) என்ற பிரெளனிங்கின் கவிதை உணர்ச்சி பூர்வமாக உணர்த்துகிறது. ஆங்கிலக் கவிஞர்களுள் கீட்க இருபத்தைந்து வயதிலும், ஷெல்லி முப்பது வயதிலும், பைரன் முப்பத்தாறு வயதிலும் உயிர் நீத்தனர். பிரெளனிங் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தமது எழுபத்தேழாம் வயதில் உயிர்நீத்தான். தன் மனைவி இறந்த பிறகும், இருபத்தெட்டு ஆண்டுகள் உயிர் வாழ்ந்து இலக்கியத் துறையில் பல சாதனைகள் புரிந்தான். பிரெளனிங் தன் முதுமையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் வாழ்ந்தவன்; வாழ்நாள் முழுதும் மக்கள் உரிமைக் கொள்கையாளனாகவே விளங்கியவன். நாட்டில் நிலவிய இழிதகைமையையும், கொடுமையையும்