பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு கந்தரம் -இ இயற்கை இன்பமும் கவிதையின் சாரமல்லவா? அன்பு என்பதே நெஞ்சின் ஈரமல்லவா? எங்கெங்கு கவிதை நெஞ்சம் இருந்தாலும் அங்கெல்லாம் உணர்வு ஓங்கி உறவு கொள்கிறது, ஒன்றிப் போகின்றது. இதுவே கவிப்போக்கு. பல்சுவைப் பகுதிகளுடன் பலாச்சுளைகளாய்ப் படைத்துள்ள கருத்துகள் பலருக்கும் இனிக்கும் பயன் வளர்க்கும். காலம், இடம் கடந்த உணர்வுகள் இங்கே களங்கண்டுள்ளன. ஆரவாரமற்ற அலைகள், அழகிய வீணையின் அரிய இன்னிசை மெல்லென எழுந்து நல்லன விளக்கும் சொல்லோவியங்கள் அங்கதம் எனப்படும் எள்ளல் வகைதான் எத்தனை எத்தனை எடுத்து விருந்து படைக்கிறார். பாவேந்தரின் படைப்புத் திறனை பலவாறு விளக்குகிறார். படிக்க வேண்டியவை. வடலூர் வள்ளலார் முதல் வாடாத கவிஞர் அப்துல் ரகுமான் வரையும் அவர்களின் வாழ்வியல் நெறிகளை வரைபடமாக்கி வரிசைப்படுத்தியுள்ளார் கவிஞர். முத்தமிழ் வேந்தரை ஒற்றுமையாக்கி வைத்தவர் இளங்கோ அடிகள். புரட்சித் துறவிகளைப் புடம் போட்டு இவர் எடுத்து விளக்குவது புதிய பார்வை. அண்டை அயல் பக்கம் அறிவைச் செலுத்தாமல், தமக்குத் தாமே சிறைப்பட்டு முடங்கிக் கிடக்கும் எழுத்தாளர்களில் இவர் ஒரு தனிப்பறவையாகிறார்! தாண்டி நடக்கிறார்! எல்லார்க்கும் இனியராம் ஈரநெஞ்சர் திருலோக சீதாராமும் எரிநட்சத்திரமாய் ஒளிகாட்டி உதிர்ந்த கம்பதாசனாரும் மறக்கப்படாமல் இருக்க, மனம் திறந்து உரைச்சித்திரம் தீட்டியுள்ளார் முருகு சுந்தரனார். பல்சுவைப் படையலாய், பயன்படும் பனுவலாய், பரிசுக்குரிய புதையலாய் இந்நூல் வருகிறது. கவிஞரின் அன்புக்கு நன்றி! கண் பருந்துக்குக் கருத்துணவாகும் கட்டுரைப் பெட்டகம் தந்து மகிழ்கிறோம். தமிழ் மனம்/மணம் தழைக்கத் தணியா துழைப்போம்! அன்புடன் வெள்ளையாம்பட்டு சுந்தரம்.