பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பாவேந்தர் படைப்பில் அங்கதம் அதனால்தான் அவர் கவிக்கோ! முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் உவமைக் கவிஞர் சுரதாவின் கவிதை ஏட்டை ஒரு நாள் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். தித்தன் மகன் கிள்ளியைப் பற்றி எழுதப்பட்ட ஒர் அகவற்பா என் கண்ணில் பட்டது. புறநானுற்றில் காதலைப் பற்றி யாரும் எழுதியதில்லை. ஆனால் நக்கண்ணை என்ற பெண்பாற்புலவர் கிள்ளியின் மீது, தான் கொண்ட காதலை வெளிப்படுத்திப் பாடியுள்ள மூன்று பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. இக் கைக்கிளைப் பாடல்கள் புறத்தில் அகம், இச்செய்தியைக் குறிப்பிட்டிருந்த அக்கவிஞர், வீரவாள் வசிக்கும் வைர உறையில் ஈர மலர்களை நிரப்புதல் போல என்ற அழகிய உவமையைக் கையாண்டிருந்தார். இந்த உவமை படித்த மாத்திரத்தில் என் உள்ளத்தில் ஒட்டிக் கொண்டது. இந்த உவமை புதுமையானதாகவும், அதே சமயத்தில் படித்தவுடன் உள்ளத்தில் பதிவதாகவும் இருந்த காரணத்தால், அதை எழுதிய கவிஞர் யாரென்று பார்த்தேன். அப்துல் ரகுமான் என்றிருந்தது, அன்றிலிருந்து இன்றுவரை அவர் என் உள்ளத்தில் நீங்காத இடம் பெற்றுவிட்டார். - கவிதையில் மட்டும் கண்டு சுவைத்த அப்துல் ரகுமானோடு ஒரு கவியரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு விரைவில் கிட்டியது. திருச்சி வானொலி நிலையத்தார் விடுதலைப் போர் வீரர்கள் என்ற தலைப்பில்