பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பையே ஏற்படுத்திவிட்டது. அண்ணாவைப்பற்றி ரகுமான் பாடியுள்ள இந்தப் பாடல் வரிகளைக் கலைஞர் பல மேடைகளில் மேற்கோளாக எடுத்துக் கூறி ரகுமானைப் பெருமைப படுத்தியிருக்கிறார். சேலத்தில் ஒருமுறை நேரு கலையரங்கில் கலைஞர் தலைமையில் கணக்கு’ என்ற தலைப்பில் ஒரு கவியரங்கம் நடத்தினோம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்பன தலைப்புகள். நான், கவிஞர் கண்ணதாசன், அப்துல்ரகுமான், தமிழன்பன் ஆகியோர் கவியரங்கேறினோம். அக்கவியரங்கிற்குக் கட்டணம் வசூலித்தோம் ரூ. 10,000/வசூலாகியது. சேலத்தில் கலைஞர் தலைமையில் புதுமையாகக் கவிதைப்பட்டி மண்டபமும் நடத்தினோம். சென்னையில், கவியரங்கங்கள் கலைவாணர் அரங்கில்தான் நடைபெறுவது வழக்கம். சென்னையில் ஒரு முறை ஐ.நா. தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி நேரு கவியரங்கம் நடத்தப்பட்டது. கலைஞருக்கும் கண்ணதாசனுக்கும் அப்போது உறவு சீர் கெட்டிருந்தது. என்றாலும் கண்ணதாசனும் எங்களோடு கவியரங்கில் கலந்துகொண்டார். - கண்ணதாசன் தமது கவிதையில் கலைஞரின் தலையுச்சியிலிருந்த வழுக்கையைப் பார்த்து, இது பூவா? தலையா? என்று நயம்படக் கேலி செய்து பாடினார். உடனே கலைஞர் அது பூவாக இருந்தாலும் சரி, தலையாக இருந்தாலும் சரி, நண்பர் கண்ணதாசன் அதைப் பறித்துக் கொண்டு போகாமல் இருந்தால் போதும் என்று கவிதையில் மறுமொழி பகர்ந்தார். கலையரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.