பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ அன்று அப்துல் ரகுமான் அற்புதமாகப் பாடினார். அடுத்த நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு இக்கவியரங்கைப் பாராட்டி Themuses of Tamilnadu என்ற பெயரில் ஒரு தலையங்கமே எழுதியிருந்தது குறிப்பிடத் தக்கது. அப்துல் ரகுமான் பாடுகிறார் என்றால், கவியரங்கில் உடன் பாடும் கவிஞர்களுக்கு உதறல்தான். எல்லாக் கவிஞர்களும் உழைத்துக்கவிதை எழுதிக்கொண்டு வருவார்கள். அந்த அச்சமும் உழைப்புமே கவியரங்க வெற்றிக்குக் காரணமாக இருந்தன. கவியரங்குகளில் சிலேடையை அதிகமாகக் கையாளும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தவர் அப்துல் ரகுமான். அவர் கையாளும் சிலேடைகள் பிரித்துப் பொருள் கொள்ளும்போது பிசிறில்லாமல் பொருத்தமாக அமைந்திருக்கும். வைகை அணைக்கட்டு என்ற அவரது பிரிமொழிச் சிலேடை மிகப் பிரபலம் 'வை கை அணை கட்டு’ என்று அவர் பிரிக்கும்போது, கைதட்டல் ஒய வெகுநேரம் ஆகும். இச்சிலேடைப் பயித்தியம் பின்னாளில் ஒரு தொற்று நோயாக மாறிக் கவியரங்கங்களைக் கோமாளிக் கூத்தாக்கிவிட்டது. கவிஞர் அப்துல் ரகுமானின் கற்பனையும், சொல்லாட்சியும் மற்ற கவிஞர்களின் படைப்பிலிருந்து வேறுபட்டே இருக்கும். அதற்குக் காரணம் அவருக்கிருந்த உருதுப் புலமை. பாரசீக உருதுக் கவிதைகளின் தாக்கம் அவர் கவிதைகளில் மிகுந்து காணப்படும். சக்கையே இல்லாத பலாச்சுளைக் கவிதை அவர் பாணி. சர்க்கரைப் பொங்கலில் முந்திரிப்பருப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடப்பதுபோல், மற்ற கவிஞர்களின் படைப்பில் நயம் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தட்டுப்படுவண்டு. ஆனால் அப்துல்ரகுமான் கவிதை,