பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் 143 உண்பவர் வாயில் மொருமொரு வென்று உதிரும் வறுத்த முந்திரிப்பருப்பு. அப்துல் ரகுமானுக்குக் கவிதையைப் போலப் பிற கலைகளிலும் கவர்ச்சியும் ஈடுபாடும் அதிகமுண்டு மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் அவர் கலந்து கொள்ள மறுத்துவிட்டாலும், பத்மா சுப்பிரமணியத்தின் நாட்டிய நிகழ்ச்சிகளைத் தேடிச் சென்று தொடர்ந்து நானும் அவரும் பார்த்தது இன்றும் என் உள்ளத்தில் பசுமையாக உள்ளது. கருத்துச் செறிவுள்ள இலக்கிய உரையாடல் ரகுமானுக்கு வாய்த்த அரும் பேறு. தூங்காமல் விடிய விடியக் கவிதைபற்றி நண்பர்களிடம் பேசுவார். இவர் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் வாணியம்பாடி இசுலாமிய கல்லூரி ஒரு கலைக்கூடமாகத் திகழ்ந்தது. கவிதை வெறி கொண்ட ஒரு மாணவர் பட்டாளத்தையே அங்கு அவர் உருவாக்கியிருந்தார். ஆண்டுதோறும் கல்லூரியில் இலக்கிய விழா இரண்டு நாள் அமர்க்களமாக நடக்கும். அப்துல் ரகுமானின் நண்பர்கள் கூட்டம் அப்போது அலை மோதும். வடஆர்க்காடு மாவட்டக் கல்லூரிப் பேராசிரியர்களும், தமிழாசிரியர்களும், மாணவர்களும் திரளாகக் கூடுவர். கவியரங்கம் பட்டிமன்றமென்று விழா தூள்பறக்கும். இரவு விருந்துக்குப் பின் கவிராத்திரி என்று ஒரு சுவையான நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடைபெறும். மாணவ மணிகள் ஒருவரிக் கவிதை. இரண்டு வரிக்கவிதை என்று நூதனமான தலைப்புகளில் கற்பனைகளை அள்ளி அள்ளி வீசுவர். அவர்கள் கற்பனை அங்கு அமர்ந்திருக்கும் பெரிய கவிஞர்களையும் மலைக்க வைக்கும். அப்துல் காதர், நாஞ்சில் ஆரிது, இக்பால் போன்ற நண்பர்கள் வயிற்றுக்கும் செவிக்கும் ஓயாது விருந்தளித்த