பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் 145 சிரிப்பார். ஆனால் ஒரு வார்த்தை கூடச் சமயத்தைப் பற்றி என்னிடம் பேசியதில்லை. சமயம் என்பது தனிமனித நம்பிக்கை' என்பதில் அவர் உறுதியானவர். அப்துல் ரகுமானுக்கு அன்பர்கள் அதிகம்; நண்பர்கள் குறைவு. மீரா, இ.சு. பாலசுந்தரம், அபி என்று அணுக்கத் தோழர்கள் சிலரே. நண்பர்களிடம் ஓர் எல்லை வைத்துப் பழகும் பண்பு அவருடையது. எப்போதும் குறைவாகப் பேசுவார்; குற்றம் கண்ட போதும் மென்மையாக நாகரிகமாக அறிவுரை கூறுவார். திருச்சியில் அண்ணா கவியரங்கம் நடைபெற்றது. அங்கு அவர் பாடிய பாட்டு வரிகளை அப்படியே தம்முடையதாக்கிக் கொண்டு தஞ்சைக் கவியரங்கில், ஒரு நண்பர் அவர் எதிரிலேயே பாடினார். அந்த நண்பர் இப்போது ஒரு திரைப்படக் கவிஞர். மேடையில் அமர்ந்திருந்த எங்களுக்கெல்லாம் கோபம் வருத்தம். ஆனால் அப்துல் ரகுமான் புன்சிரிப்போடு மேடையில் அமர்ந்திருந்தார். "கலைஞர்” என்ற சொல் மற்றவருக்கு அரசியல் தலைவர் அமைச்சர் நண்பர்; பத்திரிகையாளர் கவிஞர்; திரைப்பட வசனகர்த்தா. ஆனால் அப்துல் ரகுமானுக்கு அச்சொல் 'சுவாசம்’. அண்ணன் தம்பியின் ஆழமான பாசமும், காதலன் காதலியின் மென்மையான சிலிர்ப்பும், குரு சிஷ்ய பக்தியும் கலந்த ஒரு புதுக்கலவை அவர்கள் இடையில் உள்ள தொடர்பு. அதியமான் ஒளவை, கோப்பெருஞ்சோழன் பிசிராந்தை தொடர்பு எவ்வாறு பண்டைய இலக்கியங்களில் பேசப்படுகிறதோ, அதுபோல் இவர்கள் நட்பும் எதிர்கால இலக்கிய வரலாற்றில் பேசப்படும். அப்துல் ரகுமானின் முதல் மரியாதை கவிதைக்கே. குடும்பம், பணம் எல்லாம் இரண்டாம் பட்சம். அவர்