பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் (1) பாட்டும் பறவையும் பறவைகள் - அழகின் மேய்ச்சல்! இயற்கையின் இடப்பெயர்ச்சி! பறக்கும் கவிதை! பறவைகளைப் பாடாத புலவரில்லை. சங்கப் புலவர்களும் காப்பியப் புலவர்களும் பாடினர்; பிரபந்தப் புலவர்கள் தமது கற்பனையில் பறவைகளுக்குச் சிறப்பிடம் கொடுத்துப் பாடினர். தூதுப் பிரபந்தங்களில் கிள்ளையும் குயிலும் காப்பியத் தலைவர்களுக்கு ஒப்பாகப் பாரட்டப் பெற்றன. காமவேளின் தசாங்கங்களில் கிள்ளை வாகனமாகவும், குயில் எக்காளமாகவும் இடம் பெற்றுள்ளன. கிள்ளை பேசும் பறவை. குயிலும் வானம்பாடியும் பாடும் பறவைகள் மயில் ஆடும் பறவை. வானம்பாடி இரவில் பாடும்; குயில் இளவேனில் பருவத்தில் மாலையிலும் விடியற்காலையிலும் பாடும். மேலை நாடுகளில் கக்கூ, நைட்டிங்கேல், லார்க் என்ற பாட்டுப் பறவைகள், இலக்கியங்களில் பரவலாகப் பேசப்படுகின்றன. - - மில்டன் தனது கவிதையில் நைட்டிங்கேலைப் பற்றிக் குறிப்பிடும்போது, “உன் வாயிலிருந்து அமுததாரை