பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் 149 தான் என் இலட்சியம்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அன்றைய வெற்றிப் படங்களான மகாமாயா, ஞான செளந்தரி, மங்கையர்க்கரசி, லைலா மஜ்னு, அமரகீதம், மர்ம வீரன் உட்பட ஐம்பது படங்களுக்கு மேல் பாடல் எழுதியுள்ளார். பழம்பெரும் இசையமைப்பாளரான நெளஷாத் இசையமைத்த ஆன், வானரதம் அக்பர், (மொகலே ஆஸம்), சங்கர் ஜெய்கிஷன் இசையமைத்த 'அவன்', ஓ.பி. நய்யார் இசையமைத்த பாட்டாளியின் சபதம் (நயா தெளர்) ஆகிய திரைப்படங்களுக்குத் தமிழில் பாட்டெழுதியவர் கம்பதாசன். நெளவு:ாத்தின் நட்பு இவருக்கு நீண்ட நாள் இருந்தது. 'ஆன்’ படம் வெளியான போது கம்பதாசன் புகழேணியின் உச்சியில் இருந்தார். ஒரு நாள் தம் இயக்கத் தோழரான சங்கரன் இருப்பிடத்துக்கு வந்து, பத்தாயிரம் ரூபாய் அடங்கிய நோட்டுக் கட்டை மேசை மீது போட்டார். வழக்கம் போல் வீண் செலவு செய்யாமல் வங்கியில் போட்டு வைக்கும்படி சங்கரன் கவிஞருக்கு அறிவுரை கூறினார். “பணத்தைப் பாதுகாக்கச் சொல்கிறாயே! நீயொரு சோஷலிஸ்டா?’ என்று அவரைக் கடிந்து விட்டுப் பணத்தோடு கவிஞர் சென்றார். சில நாட்களுக்குப் பிறகு யாரோ ஒரு டாக்சிக்காரன் கம்பதாசனைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து சங்கரனிடம் விட்டுச் சென்றான். - அவர் பையைத் துழாவிப் பார்த்தார் சங்கரன். அதில் மூன்றே ரூபாய்கள் இருந்தன. டாக்சிக் கட்டணத்தைப் Ljoð மடங்கு கூட்டிக் கொடுக்கும் வழக்கமும் கவிஞருக்கு உண்டு. பேராசிரியர் அன்பழகன் தாம் பாவேந்தரைப் பற்றி எழுதியுள்ள கட்டுரை யொன்றில், கம்பதாசனின் ஆடம்பர வாழ்க்கை பற்றிக் கீழ்க்கண்டவாறு ஒரு குறிப்பை வழங்குகிறார் : .