பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு கந்தரம் 一图 “அந்நாட்களில் கலையுலகில் செல்வாக்குப் பெற்றிருந்த கவிஞர் கம்பதாசனோடு என் இல்லத்துக்குப் பாவேந்தர் வருவார். சிறிது நேரம் உரையாடி விட்டு விடை பெறுவார். “ஒரு முறை கம்பதாசன் அவர்கள், பாவேந்தரிடம் கொண்டிருந்த பேரன்பு (பக்தி என்று கூடக் கூறலாம்) காரணமாக ஒரு பெரிய உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று உயர்ந்த மதுவகைகளையெல்லாம் அவரைப் பருகுமாறு செய்தார். “கவிஞருடன் நானும், தேசிய வார ஏட்டின் ஆசிரியர் ஒருவரும் சென்றிருந்தோம். கம்பதாசன், பாவேந்தர் போதும் என்றாலும் வற்புறுத்தி நிரம்பப் பருகுமாறு செய்துவிட்டார். அப்போது கம்பதாசன் நூறு ரூபாய் நோட்டுகளாகச் செலவிடும் வாய்ப்புப் பெற்றிருந்த கால்ம் என் வருமானமெல்லாம் கவிஞருக்கே! என் குருநாதருக்கே!' என்று முழங்கியபடி ஆர்வத்தோடு செலவிட்டார். விடுதியிலிருந்து ஒரு பெரிய காரில் வீடு வந்து சேர்ந்தோம்.' - * * ‘‘1946 ஆம் ஆண்டு பாவேந்தக்கு அண்ணா ரூ 25,000 நிதி வழங்கினார். அந்நிதிக்குக் கம்பதாசன் அளித்த தொகை ரூ. 50. அந்நாளில் அது மிகப் பெரிய தொகை” என்று சுரதா கூறியுள்ள்ார். கம்பதாசன், பாவேந்தரிடம் மோதிக் கொண்ட நிகழ்ச்சிகளும் உண்டு. ‘காளமேகம்' படத்திற்குப் பாவேந்தர் எழுதிய பாடலொன்றுக்குத் திருத்தம் கூறினாராம் கம்ப்தாசன். உடன்ே பரிவேந்தருக்குச் சினம் வந்துவிட்டது: "நீ எனக்கு ஆசர்னுமல்ல என்னுடைய மாணவனும் அல்ல. உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ!' என்று கடிந்து கொண்டாராம். இதை முல்லை முத்தையா தம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். கம்பதாசனின் குடும்ப வாழ்க்கை ஒரு சோகக்கதை. ஆராய்ச்சி மணி என்ற படத்துக்கு நடனமாட வ்ந்த சித்ரா'