பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பாவேந்தர் படைப்பில் அங்கதம்-டு) என்ற கேரளப் பெண் இவர் முதல் மனைவி. அப்பெண் வள்ளத்தோள் மகாகவியின் பேத்தி என்பது குறிப்பிடத் தக்கது. சித்ரா சில காலமே இவருடன் வாழ்ந்தாள். அவளது பிரிவு கவிஞர் உள்ளத்தில் ஆறாத புண்ணாகவே இருந்தது. சித்ராவின் பிரிவுத் துயரத்தைக் காதலும் கண்ணிரும் என்ற கவிதையில், வீங்குவெயில் தனில்பழனம் உழுவோன் நெற்றி வேர்வையென என்கண்ணிர் விரையுதேடி கண், சமைத்த வெண்பருக்கை அனைய எனறன. - கண்ணிரில் கொடுங்காலப் பசி மாறாதோ? என்று உருக்கமாகப் பாடி வெளிப்படுத்துகிறார். சித்ராவின் பிரிவிற்குப் பின் சுசன் என்ற கிறித்தவப் பள்ளியாசிரியையோடு சில காலம் குடும்பம் நடத்தினார். சித்ரா மூலம் இவருக்கு ஒர் ஆண்மகவும், சுசன் மூலம் இரண்டு பெண் ம்கவும் பிறந்தன. - கம்பதாசன் குறுகிய காலத்தில் நிறைய எழுதியிருக்கிறார். இவர் படைப்புக்கள் கம்பதாசன் கவிதைகள், கம்பதாசன் கதைகள், கம்பதாசன் நாடகங்கள் என்று புலியூர்க் கேசிகனால் மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. வேளை வந்தது, புத்தர் புனர்ஜென்மம், கனவு, காணிக்கை, இரத்த ஒவியம் என்று நயம் மிக்க ஐந்து சிறு காப்பியங்கள் கம்பதாசனால் எழுதப்பட்டுள்ளன. காப்பியத்திற்குரிய கருப் பொருள்களைத் தேர்வு செய்வதில் இவர் வல்லவர். மகதத்தின் நாட்டியப் பேரொளி வாசவதத்தை, உபகுப்தன் என்ற புத்த பிட்சுவின் மீது கொள்ளும் ஒரு தலைக் காதல் பற்றியது வேளைவந்தது என்ற காப்பியம்.